அலைதலின் பொழுது...!
(யாழ் முஸ்லிம் வலைத்தளம் நடத்திய கவிதைப் போட்டிக்காக கிடைத்த கவிதை இது)
ஏ.நஸ்புள்ளாஹ்
எப்போதோ மனசெங்கும்
பட்டுத்தெரித்த இருண்மையின் நிழல்
இன்னும் உயிரோடிருக்கிறது.
ஒரு சமூகத்திடம் இன்னொரு சமூகம்
தன் மேலாதிக்கத்தை நிலை நிறுத்தியதால்தான்
விடுதலைப் போராட்டம் வந்ததாக கூறியவர்கள்
மற்றொரு சமூகத்திடம்
பட்டுத்தெரித்த இருண்மையின் நிழல்
இன்னும் உயிரோடிருக்கிறது.
ஒரு சமூகத்திடம் இன்னொரு சமூகம்
தன் மேலாதிக்கத்தை நிலை நிறுத்தியதால்தான்
விடுதலைப் போராட்டம் வந்ததாக கூறியவர்கள்
மற்றொரு சமூகத்திடம்
தங்கள் மேலாதிக்கத்தை நிலை நிறுத்தியபோது
எனக்கும் என்னைச் சார்ந்தவர்களுக்கும்
அன்று வியப்பாகவிருந்தது
தாய் மண்ணை விட்டுப் பிரிந்து செல்வது
எனக்கு வரலாற்றில் புது விடயமாக இருக்கவில்லை
எனக்கும் என்னைச் சார்ந்தவர்களுக்கும்
அன்று வியப்பாகவிருந்தது
தாய் மண்ணை விட்டுப் பிரிந்து செல்வது
எனக்கு வரலாற்றில் புது விடயமாக இருக்கவில்லை
எனது மூதாதையர்கள் முசன் என்ற பிரதேசத்திலிருந்து
எழுதுவெட்டுவான் என்ற பிரதேசத்திற்கும்
பின் சாவகச்சேரிக்கும் பின்னர் நல்லூருக்கும்
பின் யாழ்ப்பாணம் சோனகத்தெரு என
இதற்கு முன் டயரியில் பல ஞாபகங்கள்
மூன்று தசாப்த கரும்புள்ளியில்
பூர்வீக இருப்பை மீட்க
இன்னும் விடுதலைப் பாடலை இசைத்தபடி
அலைகிறது பொழுது..!
எழுதுவெட்டுவான் என்ற பிரதேசத்திற்கும்
பின் சாவகச்சேரிக்கும் பின்னர் நல்லூருக்கும்
பின் யாழ்ப்பாணம் சோனகத்தெரு என
இதற்கு முன் டயரியில் பல ஞாபகங்கள்
மூன்று தசாப்த கரும்புள்ளியில்
பூர்வீக இருப்பை மீட்க
இன்னும் விடுதலைப் பாடலை இசைத்தபடி
அலைகிறது பொழுது..!
Post a Comment