யாழ் முஸ்லிம் வலைத்தளம் முதலிடம் - சட்டத்தரணி ரமீஸ்
சட்டத்தரணி ரமீஸ் |
யாழ்ப்பாண முஸ்லிம்கள் உலகின் எந்த மூலையிலிருந்தாலும் அவர்களுக்கு தகவல்களை கொண்டு சேர்ப்பதில் யாழ் முஸ்லிம் வலைத்தளம் முதலிடம் வகிப்பதாக சட்டத்தரணி ரமீஸ் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது,
யாழ் முஸ்லிம் வலைத்தளம் தனது ஒருவருடத்தை நிறைவு செய்வதற்காக மகிழ்வடைகிறேன். யாழ்ப்பாண முஸ்லிம்களின் வரலாற்றில் இதற்கு முன்னர் இவ்வாறான ஒரு வலைத்தளம் இயங்கியதில்லை. யாழ் முஸ்லிம்கள் உலகின் எந்த மூலையிலிருந்தாலும் அவர்களுக்கு தகவல்களை கொண்டு சேர்ப்பதில் இன்று யாழ் முஸ்லிம் வலைத்தளமே முதலிடம் வகிக்கிறது.
யாழ்ப்பாண முஸ்லிம்களின் இளைய தலைமுறை தமது தாயகத்தின் வரலாற்றை அறிந்துகொள்ள யாழ் முஸ்லிம் வலைத்தளம் அற்புதமான பணியை அற்றுகிறது என்றால் அது மிகையாகாது. இன்றைய நவீன நூற்றாண்டில் இளைய தலைமுறை தகவல் தொழிற்நுட்பத்தை நம்பியிருக்கையில் அந்த தொழிற்நுடபம் மூலம் யாழ் முஸ்லிம் சமூகத்திற்கு யாழ் முஸ்லிம் வலைத்தளம் பங்காற்றுகிறது எனலாம்.
அந்தவகையில் யாழ் முஸ்லிம் வலைத்தளம் தொடர்ந்து செயற்படவேண்டும். முஸ்லிம் சமூகத்திற்கான அதன் சேவைகள் தொடரவேண்டும். யாழ் மஸ்லிம் வலைத்தளத்திற்கு என்றும் எனத ஒத்துழைப்புகள் கிடைக்கும் என்றார்.
Post a Comment