Header Ads



இலங்கை முஸ்லிம்களின் உண்மைகளை அறியப்படுத்துகிறது - என்.எம். அமீன்

என்.எம். அமீன்
இலங்கை முஸ்லிம்கள் பற்றிய உண்மைகளை யாழ் முஸ்லிம் வலைத்தளம் வெளிக்கொண்டு வருவதாக நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியரும், சிறிலங்கா முஸ்லிம் கவுன்ஸில் தலைவருமான என்.எம். அமீன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,

ஓராண்டு நிறைவைக் கொண்டாடும் யாழ் வலையத் தளத்துக்கு எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 21வருடங்கள் நிறைவு பெறும் இவ்வேளை வடக்கில் வாழ்ந்து இடம் பெயர்ந்து வாழும் அன்ஸிரின் முயற்சியால் ஆரம்பிக்கப்பட்ட யாழ் வலையத்தளத்துக்கு ஓராண்டு நிறைவு பெறுகின்றது.

இலங்கை வாழ் முஸ்லிம்கள் பற்றிய உண்மைகளை உலகுக்கு வெளிக்கொணர்வதற்காக கடந்த ஓராண்டில் யாழ் வலையத்தளம் ஆற்றிய பங்களிப்பு பாராட்டுக்குரியது. இலங்கை முஸ்லிம்களுக்கென தனியான நாளிதழ்களோ, வானொலியோ, தொலைக்காட்சியோ இல்லாத நிலையில் இந்த வலையத்தளம் ஆற்றும் சிறுபணிகூட பெரிதாக மதிக்கப்பட வேண்டியுள்ளது.

வடக்கிலிந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீளக்குடியேற்ற அரசாங்கமோ இன்னும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்காத நிலையில், சர்வதேச சமூகங்களோ அக்கறையில்லாத நிலையில் அது பற்றி உலகுக்கு உரத்துச் சொல்வதற்கு ஊடகங்கள் நிறைய தேவையான ஒரு கால கட்டத்தில் இலங்கை முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். இந்த வகையில் யாழ் வலையத்தளம் மேலும் அதன் பணிகளை சீராக முன்னெடுத்து வாழ்த்துகிறேன். அதன் வளர்ச்சிக்கு வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

என்.எம். அமீன்
தலைவர் - ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம்
தலைவர் - ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில்
பிரதம ஆசிரியர் - நவமணி

No comments

Powered by Blogger.