மஹிந்தவுக்கு எதிராக அவுஸ்திரேலிய நீதிமன்றத்தில் வழக்கு
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக போர்க் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நீதிமன்றமொன்றில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் பிறந்த அவுஸ்திரேலியரான அருணாச்சலம் ஜெகதீஸ்வரன் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொதுநலவாய உச்சிமாநாட்டுக்காக அவுஸ்திரேலியாவுக்கு புறப்பட்டுச் சென்றமை குறிப்பிடத்தக்கது. வீடுகள், பாடசாலைகள், வைத்தியசாலைகள், அநாதை இல்லங்கள் மற்றும் சமூக நிலையங்கள் மீது நடத்தப்பட்ட வான் வழி தாக்குதலில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கானோருக்கான நீதியை தான் எதிர்பார்ப்பதாக ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
"அவர் செய்தவற்றால் மக்கள் இன்னமும் துன்பப்படுகிறார்கள். அதை உலகம் தெரிந்துகொள்ள வேண்டும் என எண்ணுகிறேன்" என ஜெகதீஸ்வரன் 'த ஏஜ்' பத்திரிகைக்கு கூறியுள்ளார்.
"இவைஅனைத்தையும் தான் பார்த்துள்ளதாக கூறும் ஜெகதீஸ்வரன் 2007 முதல்2009 வரை இலங்கையில் தொண்டர் உத்தியோகஸ்தராக செயற்பட்டதாக கூறியுள்ளார். இவை அனைத்துக்கும் பொறப்பான நபர் - முப்படைகளின் தளபதி- எனது நாட்டிற்கு வந்து சுதந்திரமாக செல்வதை சகித்துக்கொள்ள முடியவில்ல.ஆவர் குற்றவாளியா சுத்தவாளியா என்பதை தீர்மானிக்குமாறு அவுஸ்திரேலியாவின் அதிஉயர் நீதிமன்றத்தை நான் கோருகிறேன்" என அவர் தெரிவித்துள்ளார்.
மெல்போர்ன் நீதிவான் நீதிமன்றில் தொடுக்கப்பட்ட இவ்வழக்கு நவம்பர் 29 ஆம் திகதி விசாரிக்கப்படவுள்ளதாக ஜெகதீஸ்வரனின் சட்டத்தரணி ரொப் ஸ்ட்றே கூறியுள்ளார்.
Post a Comment