பிரிட்டன், இந்தியா, நியூஸிலாந்து, பங்களாதேஷ் எம்.பி.க்கள் யாழ் செல்வர்
பன்னாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுவொன்று நாளை வியாழக்கிழமை யாழ்.மாவட்டத்துக்கு விஜயம் செய்யவுள்ளதாக அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.
பிரிட்டன், இந்தியா, நியூஸிலாந்து, பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆறு பேரை உள்ளடக்கிய குழுவினரே இங்கு விஜயம் செய்யவுள்ளனர். இவர்களுக்கு பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோர்ஸ் பொல்ரஸ் தலைமைவகிப்பர்.
இந்தக் குழுவினர் நாளை காலை 10 மணியளவில் பலாலி விமான நிலையத்தை வந்தடையவுள்ளனர். பின்னர் முற்பகல் 11 மணியளவில் யாழ்.மாவட்ட செயலகத்தில் அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமாரைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளனர். அதன்பின்பு சிவில் சமூகப் பிரதிநிதிகளைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.
மதியத்துக்குப் பின்னர் மிதிவெடி அகற்றுப்பட்ட பிரதேசங்கள், புனர்வாழ்வளிக்கப்படும் நிலையங்கள், வீடமைப்புத் திட்டங்கள் மேற்கொள்ளப்படும் இடங்கள் போன்ற பகுதிகளுக்குச் செல்லவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment