'ஹஜ் குர்பான்' - மாற்று மதத்தவர்களை அவமதிக்காதீர் என வேண்டுகோள்
ஹஜ் பெருநாளை முன்னிட்டு ஆடு, மாடுகளை அறுத்து குர்பான் கொடுக்க விரும்பும் முஸ்லிம்கள் மாற்று மதத்தவர்களுக்கு எதுவித இடையூறுகளையும் ஏற்படுத்தாது இஸ்லாமிய முறைப்படி அதை நிறைவேற்ற வேண்டும் என்று பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபா அனைத்து முஸ்லிம்களுக்கும் வேண்டுகோள்விடுத்துள்ளார். அவரது அமைச்சில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இது தொடர்பில் மேலும் கூறுகையில்,
ஒவ்வொரு வருடமும் ஹஜ் பெருநாளையொட்டி குர்பான் கொடுக்கும்போது சில பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இப்பிரச்சனைகைளைத் தவிர்த்துக்கொள்ள வேண்டுமென்றால் இஸ்லாமிய முறைப்படி குர்பான் கொடுக்கப்பட வேண்டும். குறிப்பாக, மாற்று மதத்தவர்களுக்குத் தொல்லைகள் ஏற்படும் விதத்தில் ஆடு,மாடுகளை பொது இடங்களில் வைத்து அறுத்தல், அவற்றின் கழிவுகளைப் பொது இடகளில் வீசுதல், ஆடு, மாடுகளை சட்டவிரோதமாக எடுத்துச் செல்லுதல் போன்ற விடயங்கலால் தான் பிரச்சினைகள் வருகின்றன.
உரிய ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமான முறையில் ஆடு, மாடுகள் எடுத்துச் செல்லுதல் தடை செய்யப்பட்ட வேண்டும். உரிய ஆவணங்களுடன் ஆடு,மாடுகளை எடுத்துச் செல்லுகின்ற போது பொலிசார் இடையூறு விளைவித்தால் நான் தலையிட்டு அப்பிரச்சினையைத் தீர்த்து வைப்பேன்.
அவ்வாறான சந்தர்ப்பங்களில் 072-3007300 என்ற தொலைபேசி இலக்கத்துடன் எனைத் தொடர்பு கொண்டாள் நான் அப்பிரச்சினையைத் தீர்த்து வைப்பேன். ஆனால், திருட்டுத்தனமாக ஆடு,மாடுகளை ஏற்றி வந்து சிக்கலில் மாட்டினால் நான் தலையிடமாட்டேன். குர்பான் கொடுப்பதை மாற்று மாற்று மதத்தவர்கள் யாரும் வெறுப்பதில்லை. குர்பான் கொடுக்கும் முறையைத்தான் எதிர்க்கின்றார்கள். இஸ்லாமிய முறைப்படி குர்பான் கொடுத்தாள் இந்தப் பிரச்சினை எதுவும் ஏற்படாது.
மாற்று மதத்தவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து செயற்பட வேண்டும். அப்போதுதான் மாற்று மாற்று மதத்தவர்களும் முஸ்லிம்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பர் என்றார்.
Post a Comment