இலங்கையில் மீனவருக்கு ஓய்வூதியம்
கடற்றொழிலாளர்கள் மாதாந்தம் 10,000 ரூபாவை ஓய்வூதியமாக பெறும் விதத்தில் ‘தியவர திரிய’ என்ற பெயரில் ஓய்வூதிய திட்டமொன்றை கடற்றொழில் அமைச்சு ஆரம்பித்துவைத்தது.
இதற்கான ஒப்பந்தமொன்று நேற்று இலங்கை வங்கிக்கும், கடற்றொழில் அமைச்சுக்குமிடையே கைச்சாத்தானது. இலங்கை வங்கியும், கடற்றொழில் அமைச்சும், நீரியல் வள அபிவிருத்தி அதிகார சபையும், நீரியல் வள திணைக்களமும் இணைந்து இந்த ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறது.
18 வயதுக்கு மேற்பட்ட கடற்றொழிலாளர்கள் இத்திட்டத்துக்கு இணைத்துக்கொள்ளப்படுவார்கள் 18 வயது நிரம்பிய ஒருவர் மாதாந்த சந்தாவாக 300 ரூபாவை மட்டுமே செலுத்த வேண்டும். 55 வயதாகும் போது 10,000 ரூபாவுக்கு குறையாத தொகையை ஓய்வூதியமாக பெறுவார் என கடற்றொழில் அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரட்ண கூறினார்.
வடக்கு, கிழக்கு உட்பட நாடு முழுவதுமுள்ள அனைத்து கடற்றொழிலாளர்கள், நன்னீர் மீன்பிடி தொழிலாளர்கள் உட்பட அனைத்து மீனவர்களும் இந்த ஓய்வூதிய திட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.

Post a Comment