Header Ads



இரகசிய ஆவணங்களை இனிமேல் வெளியிடாதாம் விக்கிலீக்ஸ்

கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதால், இனி எவ்வித ஆவணங்களையும் வெளியிடப் போவதில்லை என, "விக்கிலீக்ஸ்' தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போர் பற்றிய, பல்வேறு ரகசிய ஆவணங்களை, லட்சக்கணக்கில் வெளியிட்டதன் மூலம், உலகின் கவனத்தைக் கவர்ந்தது "விக்கிலீக்ஸ்'. இதன் தொடர்ச்சியாக, "விக்கிலீக்ஸ்' நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் மீது, பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, தற்போது அவர் லண்டனில் ஜாமினில் உள்ளார்.

இந்நிலையில், "விக்கிலீக்சுக்கான' நிதி திரட்டும் வழிகளை, அமெரிக்கா அடைத்து விட்டது. விசா, மாஸ்டர் கார்டு, வெஸ்டர்ன் யூனியன் மற்றும் பே பால் போன்ற நிதி நிறுவனங்கள், "விக்கிலீக்சுக்கான' நிதி திரட்டும் வேலையை நிறுத்தி விட்டன.

இதுகுறித்து, நேற்று "விக்கிலீக்ஸ்' வெளியிட்ட அறிக்கையில், "கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், இனி, ஆவணங்கள் வெளியிடுவது நிறுத்தப்படும். நிதி திரட்டும் பணி, முழு வீச்சில் நடைபெறும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.