சமூக உணர்வு அவசியம் - நியாஸ் ஹாஜியார்
யாழ் முஸ்லிம் வலைத்தளம் யாழ்ப்பாண முஸ்லிம்களிடையே சமூக உணர்வை வளர்ப்பதில் பங்களிப்புச் செய்ய வேண்டுமென பிரபல வர்த்தகரும், சமூக சேவையாளருமான நியாஸ் ஹாஜி தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,
முஸ்லிம் சமூக உணர்வுடன் செயற்படும் யாழ் முஸ்லிம் வலைத்தளத்திற்கு எனது வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். முஸ்லிம் சமூகத்திற்கான அதன் சேவைகள் தொடரவேண்டும். யாழ்ப்பாண முஸ்லிம்கிடையெ சமூக கட்டமைப்பையும், சமூக உணர்வையும் ஏற்படுத்துவதன் மூலம் எமது பாரம்பரிய பூர்வீகப் பிரதேசங்கள் தொடர்ந்து எமது கட்டுப்பாட்டிலேயே இருக்கும் நிலையேற்படும். யாழ்ப்பாண முஸ்லிம்களின் எதிர்கால நலன்கருதி நீண்டகால திட்டங்களை வகுத்துச் செயற்படுகிறோம். இதற்கு யாழ்ப்பாண முஸ்லிம் சகோதரர்கள் எமக்கு உதவிசெய்து வருகிறார்கள்.
அதேவேளை யாழ்ப்பாண முஸ்லிம் சமூகம் தமது மூதாதையர் வாழ்ந்த பிரதேசங்களை பாதுகாக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளது. யாழ்ப்பாணத்தில் மீளக்குடியேற சிலர் பின்னடிக்கின்றனர். பிரபாகரன் யாழ் முஸ்லிம்களை வெளியேற்றியபோது நாம் தில்லையடிக்கு எதையும் எடுத்துச்செல்லவில்லை. இருந்தபோதும் எம்மவர்கள் மேற்கொண்ட அயராத முயற்சி காரணமாக வளமற்ற அந்த தில்லையடிப் பிரதேசம் வளமாக்கப்பட்டது.
வளங்கள் உள்ள தமது பூர்வீகமான பிரதேசமான யாழ்ப்பாணத்தையும் முஸ்லிம்கள் மீண்டும் வாழும் விதத்தில் நாம் நடவடிக்கை மேற்கொண்டால் நிச்சயம் மாற்றங்களை ஏற்படுத்தலாம். யாழ்ப்பாணத்தில் தற்போது புனித இஸ்லாத்தை தழுவிய 120 பேர் உள்ளனர். பிரிந்துநின்று நாம் எவ்வித பலனுமபெற முடியாது. எல்லோரையும் உள்ளீர்த்துக்கொண்டு யாழ்ப்பாணத்தில் மீளக்குடியேறியுள்ள மற்றும் மீளக்குடியேற காத்திருக்கும் முஸ்லிம்களுக்கு உதவ அனைவரும் முன்வரவேண்டும் என்றாh.
Post a Comment