'கடாபியின் மரணம்' நன்றிகெட்ட முஸ்லிம்கள் - சாடுகிறார் அஸ்வர்
முஸ்லிம் உலகத் தலைவர்களை கருவறுக்கும் நடவடிக்கைகளை மேற்குலக வல்லரசு நாடுகள் வேகமாக மேற்கொண்டு வருவதை லிபியாவின் முன்னாள் தலைவர் கேர்ணல் கடாபியின் படுகொலை மூலம் உலகம் உணரத் தலைப்பட்டுள்ளது என ஏ.எச்.எம்.அஸ்வர் எம்.பி. குறிப்பிட்டார். மௌலவி காத்தான்குடி பௌஸ் எழுதிய எகிப்து முதல் இலங்கை வரை இஸ்லாமியர்களின் இசைஞானம் ஆய்வு நூல் வெளியீட்டு விழா பாணந்துறை ஜீலான் மத்திய கல்லூரியில் நடைபெற்றது. அந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், கேர்ணல் கடாபி ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட மற்றும் அநீதிகளுக்கும் அவலங்களுக்கும் ஆளாகிய மக்களுக்காக சர்வதேச ரீதியில் குரல் கொடுக்கும் சக்தியாக திகழ்ந்தார். இலங்கையின் உற்ற நண்பர் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு நம்நாட்டுக்கு பல வழிகளிலும் உதவினார். உலக முஸ்லிம்களுக்கு உதவி செய்தவர்.
இவ்வாறான ஒருவர் மிகவும் பயங்கரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரின் படுகொலை குறித்து கேர்ணல் கடாபியிடமிருந்து உதவிகளைப் பெற்றவர்களும் ஏனைய முஸ்லிம் இயக்கங்களும் தமது கண்டனத்தை தெரிவிக்காதுள்ளமை புரியாத புதிராகவுள்ளது எனவும் கூறினார்.
Post a Comment