குர்பானுக்காக ஒட்டகங்களை இறக்குமதிசெய்ய தயார் - அமைச்சர் மேர்வின் அதிரடி
ஹஜ் பெருநாள் குர்பானுக்காக கன்றுக் குட்டிகள், பசுக்கள், எருமைகனை அறுக்க வேண்டாமென அமைச்சா மேர்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார். முஸ்லிம் பிரதிநிதிகளுக்கும், அமைச்சருக்கும் இடையே நடைபெற்ற சந்திப்பொன்றின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அமைச்சர் மேர்வின் மேலும் கூறியிருப்பதாவது,
மாடுகள் வதை செய்யப்படாது உரியமுறையில் அறுக்கப்பட வேண்டும். இல்லாதபட்சத்தில் அதை தடுத்துநிறுத்த நான் நடவடிக்கை எடுப்பேன். மாடுகளை குர்பானுக்காக அறுக்காமல் ஆடுகள் அறுப்பது சிறந்தது. ஆனால் எல்லோராலும் விலைகொடுத்து ஆட்டை வாங்க முடியாது. தேவையேற்படுமானால் ஒட்டகங்களைக்கூட இறக்குமதி செய்ய நான் தயாராகவுள்ளேன்.
எந்தவகையிலும் மாடுகள் வதை செய்யப்படக்கூடாது என்பதே நான் முஸ்லிம்களுக்கு விடுக்கும் வேண்டுகோள். நான் மாட்டிறைச்சி சாப்பிடுவதில்லை. முஸ்லிம்கள் எமது சகோதரர்கள். உலகம் எமது நாட்டைத் தாக்கும் போது எமக்கு உதவியவர்கள் முஸ்லிம் தலைவர்கள் அதனை நாம் மறந்துவிடவில்லை என்றார்.
Post a Comment