Header Ads



இலங்கையை லிபியாவாக்க முயற்சி, தமிழ் கூட்டமைப்பு சதி - ஹெல உறுமய

லிபியாவில் ஏற்பட்டது போன்ற அசாதாரண சூழ்நிலையை இலங்கையிலும் தோற்றுவித்து அதனால் ஏற்படும் பாதகமான விளைவுகளைத் தனது கோரக்கண்களால் பார்த்து ரசிப்பதற்கான சதிமுயற்சிகளை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு முனைப்புடன் முன்னெடுத்து வருகின்றது. இவ்வாறு குற்றம்சாட்டியுள்ளார் ஜாதிக ஹெல உறுமயவின் முன்னாள்  தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எல்லாவல மேதானந்ததேரர். அவர் மேலும் கூறியவை,

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் மக்கள் ஜனநாயகக் காற்றைச் சுதந்திரமாக சுவாசிப்பதற்கு அரசு வழிசமைத்துக் கொடுத்துள்ளது. அதேபோன்று, தீவிரவாதிகளிடமிருந்து எம் சகோதரர்களை மீட்டு நல்வழியில் இட்டுச்செல்லும் நடவடிக் கைகளையும் அரசு இதய சுத்தியுடன் முன்னெடுத்துள்ளது.வடக்கு, கிழக்கில் சுதந்திரமாக இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றது.ஆனால், அவ்வாறானதொரு சூழ்நிலையை சுதந்திரத்தை யார் பெற்றுக்கொடுத்தனர் என்பதை அவர்கள் மறந்துவிட்டனர். உள்நாட்டில் பேசித்தீர்க்க வேண்டிய விடயங்களை சர்வ தேசமயப்படுத்துவதற்கு கூட்டமைப்பினர் முயற்சிக்கின்றனர்.

அவர்கள் இலங்கைக்கு எதிரானவர்களுடன் இணைந்து செயற்படுகின்றனர். இவர்களின் இந்தக் குரோதப்போக்கு டைய நடவடிக்கைகளை உற்று நோக்கிப் பார்த்தால் லிபியாவில் ஏற்பட்டதொரு அசாதாரண சூழ்நிலையை இலங்கையிலும் தோற்றுவிக்கவே முயற்சிக்கின்றனர் என்பது தெட்டத் தெளிவாகத் தென்படுகின்றது. சனல் 4 தொலைக் காட்சி நிறுவனப் பிரதிநிதிகள் லிபிய நாட்டு ஜனாதி பதி கடாபிபோல் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத் தைப் பார்த்ததும் மௌனிப்பது ஏன்? இலங்கைக்கு ஒரு சட்டமும், லிபியாவுக்கு இன்னு மொரு சட்டமுமா? இதிலிருந்தே சர்வதேச சூழ்ச்சிகள் அம்பலமாகியுள்ளன.

லிபிய ஜனாதிபதி கடாபி, தீவிரவாதி ஒஸாமா பின்லேடன் அல்லர் என்பதைப் புரிந்து கொண்டு நேட்டோப் படைகள் செயற்பட்டிருக்க வேண்டும். அவர்கள் அவ்வாறு செய்ய வில்லை. இவ்வாறு இலங்கைக்கு எதிராக சதித்திட்டங்களை வகுப் பவர்களுக்கு கூட்டமைப்பினர் வால் பிடிக்கின்றனர். இதனால் எந்தவித மாற்றமும் ஏற்படப்போவதில்லை.  என்றார் அவர்.

No comments

Powered by Blogger.