லிபியாவில் இஸ்லாமிய சட்டங்கள் - மேற்குலகு ஆத்திரம், ஏமாற்றம்
லிபியா சுதந்திரமடைந்து விட்டதாக அதன் புதிய ஆட்சியாளர்கள் அறிவித்து ஒரு தினந்தான் ஆகியிருக்கும் நிலையில், அங்கு இரண்டு விடயங்கள் மேற்குலகை அவர்கள் மீது சந்தேகத்துடன் திரும்பிப் பார்க்கச் செய்திருக்கின்றன.
முதலாவது விடயம் மோதல்களின் இறுதிக்கட்டத்தில் இடைக்கால நிர்வாகப் படையினர், அதாவது கடாபி எதிர்ப்புப் படையினர் நடந்து கொண்ட விதம் குறித்ததாகும். கடாபியின் வசம் இறுதியாக எஞ்சியிருந்த சேர்த் நகரில் இடைக்கால நிர்வாக படைகளின் வசம் இருந்த ஒரு விடுதியில் கடாபி ஆதரவாளர்கள் 53 பேர் ஒட்டுமொத்தமாக கொலை செய்யப்பட்டதாக மனித உரிமைகள் அமைப்பான ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் குற்றஞ்சாட்டியுள்ளது.
கொல்லப்பட்டவர்களின் சடலங்கள் அந்த விடுதியின் தோட்டத்தில் ஒட்டுமொத்தமாகக் கிடந்ததாகவும், அவர்களில் சிலரது கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்டதாகவும், பல இடங்களிலும் துப்பாக்கிக் குண்டுகள் காணப்பபட்டதாகவும் அந்த அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. அந்த விடுதியின் சுவர்களின் கடாபி எதிர்ப்புப் படையினரின் பல பிரிவுகளின் பெயர்கள் எழுதப்பட்டிருந்தன.
அவர்கள் அந்த விடுதியை ஒரு சிறையாகப் பயன்படுத்தியதாக உள்ளூர் மக்கள் கூறியிருக்கிறார்கள். அங்கு கொல்லப்பட்டவர்கள் அனைவரும் உள்ளூரைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்களில் ஒருவர் அங்கு இருந்த கடாபி ஆட்சியின் அதிகாரி என்றும், இன்னுமொருவர் இராணுவ அதிகாரி என்றும் உள்ளூர் மக்கள் கூறியிருக்கிறார்கள்.
ஆகவே அவர்கள் கைது செய்யப்பட்டு ஒட்டுமொத்தமாகக் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்று கூறியுள்ள ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு, அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோரியுள்ளது. இந்தப் படுகொலை நடவடிக்கையைப் பார்க்கும் போது இடைக்கால நிர்வாக கவுன்ஸிலின் படையினர் தாம் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் என்ற மன நிலையில் செயற்பட்டிருப்பது போல் தென்படுவதாக அது குற்றஞ்சாட்டியுள்ளது.
அடுத்த விடயம் சுதந்திரப் பிரகடனத்தில் இடம்பெற்ற குறிப்புகள் சம்பந்தப்பட்டது. அவை ஒருவகை கடும்போக்கு இஸ்லாமிய சாயலில் இருந்ததாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. தமது நாட்டுச் சட்டங்களின் முக்கிய மூலமாக இஸ்லாம்தான் இருக்கும் என்பதை புதிய ஆட்சியாளர்கள் ஏற்கனவே அறிவித்துவிட்டார்கள்.
ஆனால், லிபியாவின் எதிர்காலம் குறித்த பிரகடனம் மேற்குலகைச் சேர்ந்த பலரது கண்களை சந்தேகத்துடன் விரியச் செய்துள்ளது. சில வகைக் கடன்களுக்கான வட்டிகளை ரத்துச் செய்தல், ஒன்றுக்கும் அதிகமான மனைவிகளை கொண்டிருப்பதற்கான தடையை அகற்றுதல் போன்றவை மேற்குலகைச் சேர்ந்தவர்களை சந்தேகமடையச் செய்துள்ளன.
இடைக்கால நிர்வாக கவுன்ஸிலின் பேச்சாளர் இவற்றை நிராகரித்திருக்கிறார்.ஒரு பெரிய முஸ்லிம் நாடு இப்படியான விடயங்களைத்தானே பின்பற்றும் என்று இதற்கு ஆதரவாக வாதிடப்படலாம். அத்துடன் இஸ்லாமிய சட்டங்களைப் பின்பற்றும் நாடுகளில்கூட பல்வேறு பாங்கிலான ஆட்சிகளுக்கு வாய்ப்பிருக்கிறது என்பதும் உண்மை.
அதுமாத்திரமன்றி, இடைக்கால நிர்வாக கவுன்ஸிலில் அங்கம் வகிக்கும், இஸ்லாமியவாதிகள் மற்றும் மதசார்பற்றவர்களுக்கு இடையிலான முரண்பாடுகளுக்கு மத்தியில்தான் இந்த சுதந்திரப் பிரகடனம் கூட வந்திருக்கிறது.
ஒரு இக்கட்டான, இலகுவில் நொருக்கிப் போய்விடக் கூடிய தருணத்தில் ஒற்றுமையை நிலைநாட்டுவதற்கான முயற்சியாகவும் இது பார்க்கப்படலாம். இந்த நிலையில் தற்போதைக்கு இவற்றை சந்தேகக் கண் கொண்டு பார்க்கத் தேவையில்லை என்று மேற்குலகம் நினைக்கலாம். ஆனால், இந்தப் பிரேரணைகள் எல்லாம் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படப் போகின்றன என்பதையும் அது அரபு உலகின் புது வசந்தத்தை பிரதிபலிக்குமா என்பதையும் மேற்குலகு மிகவும் உன்னிப்பாக அவதானிக்கும்.

bbc
Post a Comment