Header Ads



வடக்கில் முஸ்லிம்கள் அவலம் தொடருகிறது - ஹுனைஸ் எம்.பி.

வடமாகாணத்திலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்ட்டு 21 வருடங்கள் நிறைவடைகிற நிலையிலும், அவர்களால் மீண்டும் சொந்த இடங்களுக்குச் சென்று மீளக்குடியேறுவதில் சிக்கல்கள் காணப்படுவதாக வன்னி மாவட்ட எம்.பி. ஹுனைஸ் பாருக் தெரிவித்துள்ளார்.

வடக்கு முஸ்லிமகள் தமது தாயகத்திலிருந்து வெளியேற்றப்பட்டு 21 வருடங்கள் நிறைவடைவதையிட்டு அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வடக்கு முஸ்லிம்கன் புத்தளத்தில் வீடு கட்டியுள்ளனர், அவர்களுக்கு வடக்கில் காணிகள் இல்லை என்ற காரணங்களுக்காக அவர்கள் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகின்றனர்.

இந்தியாவின் வீடமைப்பு திட்டத்தில்கூட அவர்கள் உள்வாங்கப்படுகிறர்கள் இல்லை. வடக்கு முஸ்லிம்கள் அன்று தமது தாயகத்திலிருந்து வெளியேறும் போது அவர்கள் குறைந்த குடும்பங்களாக இருந்தனர். ஆனால் இன்று குடும்பங்கள் பல்கிப் பெருகியுள்ளன. இக்குடும்பங்களுக்கு ஏற்றவகையில் வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும். இருந்தபோதும் இவ்வாறான வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை.

சொந்த மண்ணில் மீளக்குடியேற தொடர்ந்தும் முஸ்லிம்கள் காத்திருக்கும் நிலையேற்பட்டுள்ளது. அவர்களுக்கான வசதிகள் செய்து கொடுக்கப்படுமாயின் அவர்கள் மீளவும் அங்குசென்று குடியேறும் வாய்யப்பு கிட்டும். எனவே நாம் எல்லோரும் போதங்களை மறந்து வடக்கு முஸ்லிம்கள் மீண்டும் தமது தாயகத்தில் மீளக்குடியேற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவரது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.