Header Ads



பிரான்ஸில் சிறப்பாக நடைபெற்ற யாழ்ப்பாண முஸ்லிம்களின் ஒன்றுகூடல்

யாழ்ப்பாண முஸ்லிம்கள் தமது பாரம்பரிய பூர்வீகப் பிரதேசத்திலிருந்து புலிகளின் பலாத்கார இனச்சுத்திகரிப்புக்குள்ளாகி நேற்று 30 ஆம் திகதி 21 வருடங்கள் நிறைவடைந்தன.

இதனை ஞாபகப்படுத்தும் நோக்குடன் பிரான்ஸில் வசிக்கும் யாழ்ப்பாண முஸ்லிம்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நேரம் ஒன்று கூடலொன்றை நடத்தியிருந்தனர். பிரான்ஸில் வசிக்கும் சகோதரர் தாரிக் வீட்டில் இந்த ஒன்றுகூடல் நடைபெற்றுள்ளது.

எதிர்வரும் காலங்களிலும் இதுபோன்ற நிகழ்வுகளை மேலும் சிறப்பாக செய்யவும் பிரான்ஸில் உள்ள யாழ்ப்பாண முஸ்லிம்கள் உறுதிகொண்டுள்ளனர்.

அதேவேளை எதிர்வரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகளை கட்டார், டுபாய், லண்டன் ஆகிய நாடுகளில் மேற்கொள்ள யாழ் முஸ்லிம் வலைத்தளம் தீர்மானித்துள்ளதும், இதற்கு அந்நாடுகளில் வாழும் யாழ்ப்பாண முஸ்லிம்கள் தமது அதரவை வெளிப்படுத்தியுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.