லிபியாவின் புராதன இஸ்லாமியக் காலத்து நாணயங்கள் எகிப்தில்
லிபியாவின் பெங்காசியில் உள்ள வங்கி ஒன்றிலிருந்து திருடப்பட்ட நூற்றுக்கணக்கான புராதன நாணயங்கள் எகிப்தில் உள்ளதாக தேசிய மாற்றத்துக்கான பேரவை தெரிவித்துள்ளது.
லிபியாவில் நடைபெற்ற போராட்டங்களின்போது, கணிசமான பெறுமதி வாய்ந்த இந்த நாணயங்கள் எடுத்துச் செல்லப்பட்டிருக்கலாம் எனவும் அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
இதன்போது வங்கிக்கு தீவைத்து விட்டு கொள்ளையர்கள் நாணயங்களைக் கைப்பற்றியிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. ரோமன், கிரேக்கம், புராதன இஸ்லாமியக் காலத்து நாணயங்கள் பலவும் இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளன. லிபியாவின் முன்னாள் தலைவர் முஅம்மர் கடாபிக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்திருந்த நிலையில், இந்தக் கொள்ளைகள் இடம்பெற்றுள்ளன.
Post a Comment