கடாபி மரணத்தை வரவேற்கிறது ஈரான் - மதத்தன்மை ஜனநாயகத்தை வலியுறுத்து
லிபியாவின் முழுமையான விடுதலைக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளது ஈரான். லிபிய இடைக்கால அரசின் தலைவர் முஸ்தபா அப்துல் ஜலீலுக்கு ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அலி அக்பர் சலாஹி அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், வெளிநாட்டு சக்திகளின் செல்வாக்கோ தலையீடோ இல்லாத சுதந்திரத்தை பாதுகாப்பதுடன், மதத்தன்மை வாய்ந்த ஜனநாயகம் கொண்ட லிபியாவை உருவாக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய ஜலீல், லிபியா ஒரு மிதவாத முஸ்லிம் நாடாக விளங்கும் என்று கூறினார். ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ராமின் மெஹ்மன்பராஸ்ட், கடாஃபி கொல்லப்பட்டதை வரவேற்றதுடன் இனிமேல் நேசப் படைகளின் வான் தாக்குதல் இருக்காது என்று கூறினார்.

Post a Comment