Header Ads



ஐக்கிய நாடுகள் சபையில் அடிவாங்கியது அமெரிக்கா

கியூபா மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைக்கு எதிராக ஐ.நா. பொதுச்சபையில் கொண்டுவரப்பட்ட கண்டன தீர்மானத்திற்கு தொடர்ச்சியாக 20 ஆவது ஆண்டாகவும் அதிக பெரும்பான்மை வாக்கு கிடைத்துள்ளது. ஐ.நா. பொதுச்சபையில் கொண்டுவரப்பட்ட இந்த கண்டன தீர்மானத்திற்கு 186 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன.
193 அங்கத்துவ நாடுகளைக் கொண்ட பொதுச்சபையில் அமெரிக்காவோடு இஸ்ரேல் மாத்திரமே இதற்கு எதிராக வாக்களித்தது. மிக்ரோனே ஷியா, மார்ஷல் தீவுகள் மற்றும் பலவு ஆகிய மூன்று நாடுகளும் வாக்களிப்பதை தவிர்த்துக் கொண்டன.

அமெரிக்காவின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 20 ஆண்டுகளாக தொடர்ச்சியாக கண்டன தீர்மானம் நிறைவேற்றப்படுகின்றது. இதற்கு ஆதரவாக ஐ.நா. சபையில் தொடர்ந்தும் அதிக பெரும்பான்மை கிடைத்துவருகிறது. கடந்த ஆண்டு இந்த கண்டன தீர்மானத்திற்கு ஆதரவாக 187 வாக்குகள் கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.

கொமியுனிச நாடான கியூபா மீது அமெரிக்கா கடந்த 1962 ஆம் ஆண்டு முதல் பொருளாதார, போக்குவரத்து தடைகளை விதித்துள்ளது. எனினும், இந்த தடையையும் மீறி கியூபா விவகாரங்களில் அமெரிக்க தலையிடுவதாக கியூபா வெளிவிவகார அமைச்சர் பிரூனோ ரொட்ரிகொஸ் தெரிவித்தார். அத்துடன் இந்த தடையால் கியூபாவுக்கு 975 பில்லியன் டொலர் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

முன்னதாக அமெரிக்க ஜனாதிபதி பறாக் ஒபாமா, கியூபா தனது கமி யுனிஸ கொள்கைகளில் மாற்றம் கொண்டுவந்தால், அதன் மீதான தடைகளை தளர்த்த தயாராக இருப் பதாக கடந்த மாதம் தெரிவித்திருந்தார்.

No comments

Powered by Blogger.