Header Ads



அடுத்த பொதுநலவாய மாநாடு இலங்கையில் - மஹிந்தவுக்கு பாரிய வெற்றி

மனித உரிமை மீறல் விடயங்கள் கவலையளிக்கின்ற போதும் பொதுநலவாய நாட்டுத் தலைவர்களின் அடுத்த மாநாடு இலங்கையில் இடம்பெறும் என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் கெவின் ரூட் தெரிவித்துள்ளார்.

எனினும் மாநாட்டை நடத்தும் நாடே உறுப்பு நாடுகளுக்கு தனிப்பட்ட அழைப்பை விடுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் இலங்கையில் பொதுநலவாய நாட்டுத் தலைவர்கள் மாநாடு நடத்தப்படக்கூடாதென அவுஸ்திரேலிய முன்னாள் பிரதமர் மால்கம் ப்ரேசர் விடுத்துள்ள கோரிக்கைக்கு ஆதரவு கிடைத்தால் அதனை ஒத்திவைப்பது குறித்து கவனம் செலுத்த முடியும் என கெவின் ரூட் குறிப்பிட்டார்.

இலங்கை தொடர்பில் சர்வதேச மட்டத்தில் பல்வேறு விமர்சனங்கள் கூறப்படும் நிலையில் இலங்கையில் பொதுநலவாய மாநாடு நடைபெறுவதானது இலங்கை அரசாங்கத்திற்கும், ஜனாதிபதி மஹிந்தவிற்கும் பாரிய வெற்றியை ஈட்டித்தந்துள்ளது எனலாம்.

No comments

Powered by Blogger.