Header Ads



சாரதி அனுமதிப் பத்திரத்தை 7 நாட்களில் பெறலாம்

இலங்கையர்கள் சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கு 6 மாதங்கள் முதல் ஒரு வருட காலம் வரை காத்திருக்கத் தேவையில்லை எனவும் விரைவில் இலத்திரனியல் சாரதி அனுமதிப்பத்திரங்களை 7 நாட்களுக்குள் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.

மோட்டார் போக்குவர்தது திணைக்களத்துக்கு சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்காக தினமும் 1200 விண்ணப்பங்கள் கிடைப்பதாகவும் அவற்றில் 600 விண்ணப்பங்களே தினமும் ஏற்றுக்கொள்ளப்படுவதாகவும் போக்குவரத்து பிரதியமைச்சர் ரோஹன திஸாநாயக்க கூறினார்.

இனிமேல் சாரதி அனுமதிப்பத்திரங்கும் வழங்குவதற்கான செயன்முறைகள் இரு நாட்களில் பூர்த்தியாக்கப்படும் எனவும் விண்ணப்பதாரிகளுக்கு சாரதி அனுமதிப்பத்திரங்கள் 7 தினங்களுக்குள் தபாலில் கிடைக்கும் எனவும் அவர் கூறினார்.

வேரஹெர மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்காக நீண்ட வரிசையில் பலர் காத்திருக்கின்றனர். தற்போது விண்ணப்பங்களைப் பெறுவதற்காக 8 கவுன்ரர்கள் உள்ளன. அவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். அதேவேளை வேறு மாவட்டங்களிலும் இத்திணைக்களத்தின் கிளைகள் திறக்கப்படும் என அவர் கூறினார்.
 

No comments

Powered by Blogger.