Header Ads



கருப்பு ஓக்டோபர் எனும் ஈழப்போராட்டத்தில் கரைபடிந்த வரலாறு (இறுதிப் பாகம்-6)

அப்துல்லாஹ்

இதே போன்று ஒக்டோபரில் பொலநறுவையில் அப்பாவி ஏழை விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். இந்தக் தாக்குதல்களின் இழப்புக்களையும் அதன் பின்னர் இடம்பெற்ற நிகழ்வுகளையும் முஹமட் சரீப் அவர்கள் பின்வருமாறு எழுதியுள்ளார். 1992.10.15 அன்று  பொலநறுவையிலுள்ள நான்கு முஸ்லிம் கிராமங்கள் குறி வைக்கப்பட்டன. பள்ளியகொடல்ல அக்போபுர அஹமட்புரம் பம்புரான போன்ற கிராமங்களில் நடுநிசியில் புலிகளால் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 171 முஸ்லிம்களும் 12 படையினரும் கொல்லப்பட்டனர். 83 பேர் காயமடைந்திருந்தனர். இச்செய்தியை கேள்விப்பட்ட கொழும்பு முஸ்லிம்கள் கொதித்தெழுந்தனர். அதேவேளை கொழும்பு பல்கலைக்கழகத்திலிருந்த மாணவர்கள்  இதற்கெதிராக ஏதாவது செய்ய வேண்டுமென திட்டமிட்டு சகமாணவர்களின் உதவியை நாடினர். இறுதியில் அன்று பின்நேரம் இடம்பெற்ற கூட்டத்தில் ஆர்ப்பாட்டமொன்று செய்வதென்று தீர்மானிக்கப்பட்டது.

உடனடியான மாணவர்கள் தம்மாலான பணத்தை வழங்கினர். போஸ்டர்கள் பதாதைகள் தயாராகின. ஒக்டோபர் 18 அன்று ஆர்ப்பாட்டம் கொழும்பு பல்கலைக்கழக வளாகத்தில் இடம் பெற்றது. இவ்வார்ப்பாட்டத்தில் தமிழ் மற்றும் சிங்கள மாணவர்களும் கலந்து கொண்டதால் 2000 பேருக்கு மேற்பட்ட மாணவர் கூட்டம் சேர்ந்திருந்தது. ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் பி.பி.சி.இ சி.என்.என். போன்ற செய்தித் தாபனங்களும் கலந்து கொண்டிருந்தன. எல்.ரீ.ரீ.ஈ. யின் இனப்படுகொலைக்கு எதிராக முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் என்ற தலையங்கத்துடன் அவர்களுடைய தொலைக்காட்சி செய்தி ஒளிபரப்பாகியது. அதனால் மனித உரிமை அமைப்புகள் புலிகளின் சர்வதேச தொடர்பாளர்களை கேள்வி கேட்டு பின்னியிருந்தன.

இத்தகைய ஒரு நெருக்குதலின் பின்னனியில் இவ்வாறான கொலைகள் தொடரும் பட்சத்தில் தமது ஆதரவை இழக்க நேரிடும் என்று புலிகளுக்கு அந்நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்திருந்தன. இதனால் முஸ்லிம்களை பாரியளவிலும் சிறிதளவிலும் கொல்லும் நடவடிக்கைகளை புலிகள் நிறுத்த வேண்டியேற்பட்டது.  2006 ஆம் ஆண்டு மூதூரிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்படும் வரை புலிகள் பெரிதாக எதையும் செய்ய துணியவில்லை. ஆனால் உடன்படிக்கை கைச்சாத்தான 2002 ஆம் ஆண்டு வாழைச்சேனையில் வைத்து பத்து முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

வடமாகாண முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட மாதம் ஒக்டோபராகும். அதே போன்று புலிகளால் பொலநறுவ முஸ்லிம்கள் கொல்லப்பட்ட மாதமும் ஒக்டோபராகும். அந்த வகையில் இனச்சுத்;திகரிப்பும் இனப்படுகொலையும் சேர்ந்து நிகழ்ந்த ஒரு மாதம் இந்த ஒக்டோபராகும். இதை கருப்பு ஒக்டோபர் என பெயரிட்டதன் மூலம்; தமிழ் புலிகள் முஸ்லிம்கள் மீது இழைத்த அடக்குமுறைகளையும் அநீதிகளையும் அட்டூழியங்களையும் ஞாபகப்படுத்துவது ஒரு நோக்கமாகும். இவ்வாறு ஞாபகப்படுத்துவதால் என்ன இலாபம் என்று கேட்கலாம். அல்குர்ஆன் யூதர்கள் செய்த அநீதி அட்டகாசங்கள் கொலைகள் என்பவற்றைச் சுட்டிக்காட்டுவதன் மூலம் யூதர்கள் விடயத்தில் அவதானம் தேவை என்பதை சுட்டிக்காட்டுகின்றது.

 அதே போன்று இலங்கையில் தமிழர்களால் முஸ்லிம்கள் பல்வேறு காலங்களில் வெளியேற்றப்பட்டுள்ளார்கள் கொலை செய்யப்பட்டுள்ளார்கள். 1480களில் சாவகச்சேரி முஸ்லிம்கள் கனகசூரிய சிங்கையாரியனால் வெளியேற்றப்பட்டார்கள். 1744இல் நல்லூரில் வாழ்ந்த முஸ்லிம்களின் கிணறுகளில்  பன்றிகளை வெட்டிப்போட்டு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டனர். 1990இல் மன்னார் யாழ்ப்பாணம் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களிலிருந்து முஸ்லிம்கள் தமிழ் புலிகளால் வெளியேற்றப்பட்டனர். 2002இல் திருகோணமலை குரங்குப்பாஞ்சானிலிருந்து முஸ்லிம்கள் தமிழ் புலிகளால் வெளியேற்றப்பட்டனர். 2006இல் திருகோணமலை மூதூரிலிருந்து முஸ்லிம்கள் தமிழ் புலிகளால் வெளியேற்றப்பட்டனர். அங்கு வெளியேற்றத்தின் போது 60 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.

இவ்வாறு தமிழரின் வரலாறு எங்கும் முஸ்லிம் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதையே காட்டுகின்றது.

வரலாறு எமது வழிகாட்டி. எனவே கடந்த காலங்களில் நிகழ்ந்த  அவலங்கள் எமக்கு படிப்பினையைத் தர வேண்டும். தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் போது அவதானம் தேவை. தமிழர்கள் தமக்கு உதவியாக முஸ்லிம்களை அழைக்கும் போதெல்லாம் இந்த கருப்பு ஒக்டோபர் ஞாபகத்துக்கு வரவேண்டும்.
  

No comments

Powered by Blogger.