Header Ads



கடாபியின் ஜனாஸா 5 நாட்களின் பின்னர் பாலைவனத்தில் நல்லாடக்கம்

லிபியாவின் முன்னாள் அதிபர் கடாபி வபாத்தாகி இன்று செவ்வாய்கிழமையுடன் 5 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் அவரது ஜனாஸா பாலைவனத்தின் இரகசிய பகுதியயொன்றில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை லிபியாவின் இடைக்கால அரசாங்கம் உறுதி செய்துள்ளது.

அவரது உடலை அடக்கம் செய்வதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருந்தது. மிஸ்ரதா நகர மக்கள் அவரது உடலை தங்கள் நகரில் அடக்கம் செய்யக் கூடாது என எதிர்த்தனர்.. கடாபி தனது சொந்த ஊரான சிர்த்தேயில் பிடிபட்டார். எனவே அவரது உடலை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என அந்த நகர மக்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர். ஆனால் அவர் அடக்கம் செய்யப்படும் இடம் ஒரு நினைவாலயமாக மாறி விடக்கூடும் என்ற அச்சம் இடைக்கால அரசுக்கு இருந்தது. அந்த நிலை ஏற்பட்டு விடக்கூடாது என உறுதியாக இருந்தது.

கடாபியின் ஜனாஜாவை மக்கள் வரிசையாக நின்று பார்த்து சென்றனர். மக்கள் பார்க்க வசதியாக அறையின் கதவை திறந்து மூடுவதால் குளிர்பதனம் போதிய அளவில் இல்லை. எனவே கடாபியின் உடல் அழுகியது. இதனால் துர்நாற்றம் வீச தொடங்கி விட்டது. ஆகவே அவரது உடலை உடனடியாக அடக்கம் செய்ய வேண்டிய கட்டாயம் இடைக்கால அரசுக்கு ஏற்பட்டது. அத்துடன் கடாபியின் ஜனாஸாவை நல்லடக்கம் செய்யாமல் வைத்திருந்தமை மக்களின் எதிர்ப்புக்கும் உள்ளானது. இந்நிலையிலயே 5 நாட்களின் பின் அவரது ஜனாஸா உடனடியாக நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இறுதி கட்ட போரின் போது கடாபியுடன் அவரது மகன் முட்டாசிம் கடாபியும் பிடிபட்டு சுட்டு கொல்லப்பட்டார். அவரது உடலும் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதும் இந்நிகழ்வில் கடாபியின் உறவினர்கள் மற்றும் இஸ்லாமிய மதகுருமார் கலந்துகொண்டனரா என்ற  விபரம் இதுவரை தெரியவரவில்லை

No comments

Powered by Blogger.