Header Ads



மாணவனுக்கு பிரம்படி - ஆசிரியைக்கு 50,000 ரூபா பிணை

பாடசாலை மாணவன் ஒருவனை பிரம்பால் அடித்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைதான ஆசிரியை 50 ஆயிரம் ரூபா சரீரப் பிணையில் செல்ல ஹொரணை நீதவான் மஹிந்த ரணசிங்க அனுமதித்தார்.

ஹொரண பகுதியில் உள்ள பாடசாலையில் கல்வி பயிலும் 9ம் வகுப்பு மாணவன் ஒருவனுக்கே ஆசிரியை பிரம்பால் அடித்ததோடு, முகத்திலும் கையால் அடித்துள்ளதாகப் பொலிஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.

சக மாணவி ஒருவருக்கு இம் மாணவன் அன்பளிப்புப் பொருளை வழங்க இருந்ததால் மாணவனுக்கு தண்டனை வழங்கப்பட்டதாக பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பித்தனர். பெற்றோர் இது தொடர்பாக கல்வித் திணைக்களத்திலும் முறைப்பாடு செய்துள்ளனர்.

No comments

Powered by Blogger.