Header Ads



பஸ்கள் இரண்டு நேருக்குநேர் மோதல் - 50 பேர் காயம்

கொக்கரெல்ல - குருநாகலை பிரதான வீதியில் கரங்கெவ நெஷனல்வத்த பகுதியில் இன்று திங்கட்கிழமை பகல் 12.45 அளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 50 பேர் காயமடைந்துள்ளனர்.

கொழும்பிலிருந்து மெதிரிகிரிய நோக்கிச் சென்ற பஸ் ஒன்று கதுருவெலயிலிருந்து கொழும்பு நோக்கி வந்த பஸ்ஸுடன் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் இரு பஸ்களிலும் பயணம் செய்த சுமார் 50 பயணிகள் காயமடைந்த நிலையில் குருநாகல் மற்றும் பொல்கொல்ல வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொக்கரெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.