Header Ads



'அவல வாழ்வுக்கு ஆண்டு 21'

(வடக்கு முஸ்லிம்கள் அவர்களின் தாயகப் பிரதேசத்திலிருந்து வெளியேற்றப்பட்டு 21 வருடங்கள் நிறைவடைவதையிட்டு யாழ் முஸ்லிம் வலைத்தளம் நடத்திய கவிதைப் போட்டிக்கு கிடைத்த கவிதை இது)

ப. பவித்திரா
கொழும்பு வைச மங்கையர் வித்தியாலயம்

ஆண்டு 1990
மாதம் ஒக்டோபர் - இது
யாழ் முஸ்லிம்களுக்கு
இருண்ட ஒரு மாதம்!

தமிழீழ விடுதலைப் புலிகள் - எனும்
பயங்கரவாத குழுவினரால்
பலவந்தமாக வெளியேற்றப்பட்ட
இருள்படிந்த மாதமே இது!

கையில் ஒரு ஷொப்பிங் பேக்குடன்
இருநூறு ரூபா பணத்துடனும்
வெளியேற்றப்பட்ட பரிதாபம்
சொல்லித்தான் புரியனுமோ..?

பரம்பரை பரம்பரையாக
வாந்துவந்த தாயகத்தை விட்டும்
துப்பாக்கி முனையால் விரட்டியதை
அறியாதோரும் உளரோ..?

விரட்டப்பட்ட முஸ்லிம்களது
உடைமைகள் சொத்துக்கள் யாவுமே
பறிக்கப்பட்டு முழு இனமும்
இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டனரே..!

அனைத்தும் இழந்த முஸ்லிம்களை
அன்போடு வரவேற்றிட - இந்நாட்டில்
இருந்த ஓர் இடம் என்றால்
புத்தளம் என்றே புகன்றிடலாம்..!

அநாதரவான மாந்தருக்கு
அடைக்கலம் தந்து உதவிய
அவர்களையும் தம் சகோதரராய்
ஏற்று வாழ வந்தனரே..!

முஸ்லிம்களை துரத்திய - புலிகளுமே
ஒழிக்கப்பட்டு வருடங்கள்
இரண்டரை ஆகிய நிலையில்
மீளவும் குடியேற்றப்படுவரோ..?

வடபுல முஸ்லிம் அகதிகள் - தம்
சொந்த மண்ணில் குடிபுகவும்
அவலம் அனைத்தும் நீங்கிடவும்
உரிய நன்னாள் இனி வருமோ..?

No comments

Powered by Blogger.