Header Ads



2013ம் ஆண்டு க.பொ.த. உயர்தர மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதிய புலமைப்பரிசில்

2010ம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தாராதர (சாதாரண தர) பரீட்சைக்கு முதல் தடவையாக தோற்றி  பரீட்சையில் சித்தியடைந்து 2013ம் ஆண்டு கல்விப் பொதுத் தாராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தினால் புலமைப்பரிசில் வழங்கப்பட்டுள்ளது.

இப்புலமைப் பரிசிலானது இலங்கையில் உள்ள ஒவ்வொரு கல்வி வலயத்திலிருந்தும் 100 மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தெரிவு செய்யப்பட்ட ஒவ்வொரு மாணவருக்கும் க.பொ.த உயர்தர வகுப்பில் பயிலும் காலத்தில் மாதம் 500ரூபா வீதம் 2ஆண்டுக்கு உதவு தொகையாக வழங்கப்படும்.

இப் புலமைப்பரிசிலிற்கு விண்ணப்பிக்கும் மாணவர் ஒவ்வொருவரும் அரசாங்கப் பாடசாலை ஒன்றிலோ அல்லது கட்டணம் அறவிடப்படாத தனியார் பாடசாலை ஒன்றிலோ கல்வி கற்பவராக இருப்பதுடன் இவர் சார்ந்த குடும்ப வருமானம் மாதம் ஒன்றிற்கு ஐயாயிரம் ரூபாவிற்கு மேற்படாமலும் இவர் 5ம் ஆண்டு புலமைப்பரிசில் உதவு தொகை பெறாதவராகவும் இருத்தல் வேண்டும்.

இப்புலமைப் பரிசில் தொடர்பான முழுமையான விபரங்களையும் விண்ணப்படிவத்தையும் www.presidentsfund.gov.lk எனும் இணையத்தளத்திலிருந்தும் வலயக் கல்வி அலுவலகங்களிலிருந்தும் பெற்றுக் கொள்ள முடியும்.
 

No comments

Powered by Blogger.