வடமாகாணத்தின் அபிவிருத்திக்கு 15 இலட்சம் டொலர் வழங்குகிறது ஜப்பான்
வட மாகாண அபிவிருத்தித் திட்டங்களுக்காக 15 லட்சம் அமெரிக்க டொலர்களை ஜப்பான் அரசு ஒதுக்கியுள்ளது.போரால் பாதிக்கப்பட்ட வட மாகாணத்தில் ஜப்பான் அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் உதவித்திட்டங்களுக்காக இந்த நிதியை ஜப்பான் ஒதுக்கியுள்ளது.
ஐ.ஓ.எம். என்ற நிறுவனத்தின் ஊடாக வடக்கில் மேலும் பல அபிவிருத்தி நலன் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன என்று இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் நொபுஹிடோ ஹோபோ தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள ஜப்பானியத் தூதரகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார். மேலும் அவர் கூறியவை வருமாறு, வடக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தித் திட்டங்களைப் போன்று மீள் இணைப்புத் திட்டங்கள் மற்றும் மக்கள் நலத்திட்டங்களுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும். அத்துடன், மனிதாபிமான உதவிகளுக்கு இந்த நிதி பயன்படுத்தப் படவுள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தற்சமயம் பல அபிவிருத்தித் திட்டங்கள் ஜப்பான் அரசினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. யாழ். போதனா வைத்தியசாலை புனரமைப்பு, வவுனியா கிளிநொச்சி பரிவர்த்தனை இணைப்புகள், கண்ணிவெடி அகற்றும் பணிகள், ஜீவனோபாயத் திட்டங்கள் போன்றன ஜப்பான் அரசு முன்னெடுத்து வருகின்றது. இதற்கிடையில், தற்போது ஒதுக்கப்பட்ட நிதி மூலம் மேலும் பல திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம் என்றார் அவர். இந்த ஊடகவியலாளர் மாநாட்டின்போது ஜப்பான் அரசினால் ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஐ.ஓ.எம். நிறுவனத்திடம் கையளிக்கப்பட்டது.

Post a Comment