கடாபியின் ஊரில் எண்ணெய் கிடங்கு வெடிப்பு - 100க்கும் மேற்பட்டோர் மரணம்
லிபியாவின் சிர்த் நகரில் எண்ணெய் கிடங்கொன்றில் ஏற்பட்ட வெடிப்பில் 100 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.கடாபி ஆதரவுப் படைக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் இறுதிக்கட்ட மோதல் இடம்பெற்ற சிர்த் நகரில் திங்கட்கிழமை இரவு இந்த வெடிப்பு ஏற்பட்டது. எனினும் இந்த வெடிப்பு குறித்த மேலதிக தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.
பிரமாண்ட வெடிப்புச் சத்தம் கேட்டதாகவும் அதனைத் தொடர்ந்து அந்த பகுதி தீப்பிடித்து எரிந்ததாகவும் சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் ஈ.ஏ.பி செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ளார். எண்ணெய்க் கிடங்கில் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்கு ஏராளமானோர் காத்திருக்கும் வேளையிலேயே இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளன. இதனால் உயிர்ச் சேதங்கள் அதிகரித்துள்ளதாக இடைக்கால அரசு குறிப்பிட்டுள்ளது.
எனினும் எண்ணெய் கிடங்கிற்கு அருகில் உள்ள ஜெனரேட்டர் இயந்திரத்தில் ஏற்பட்ட வெடிப்பை தொடர்ந்து எண்ணெய் கிடங்கு தீப்பற்றி இருக்கலாம் என அங்கு பணிபுரியும் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவத்தில் 100 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக சிரியாவில் இருந்து செயற்படும் அல்ராய் தொலைக்காட்சி, இடைக்கால அரச அதிகாரியை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.
லிபியாவில் சுதந்திர பிரகடனத்தை இடைக்கால அரசு அறிவித்து ஒருநாள் கழிந்த நிலையில் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment