லண்டனில் செருப்படி வாங்கிய முஷாரப்
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் தற்போது லண்டனில் வசித்து வருகிறார். அவர் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் என்ற கட்சியையும் தொடங்கினார்.
இந்த கட்சி சார்பாக லண்டனில் நேற்று கூட்டம் நடந்தது. இதில் பாகிஸ்தானை சேர்ந்த 1,500 பேர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் முஷாரப் உரையாற்றியபோது, பார்வையாளர்கள் வரிசையில் இருந்து ஒரு ஷூ பறந்து வந்து மேடை முன் விழுந்தது. முஷாரப்பை குறிவைத்து எறியப்பட்ட அது, அவர் மீது படவில்லை.
இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே போலீசார் விரைந்து சென்று ஷூ எறிந்த நபரை கூட்டத்தை விட்டு வெளியேற்றினர். கூட்டம் நடந்த அரங்கத்தின் பின்வரிசையில் நின்றிருந்த மற்ற இரு நபர்களும் முஷாரப்புக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
Post a Comment