ஊடகங்கள்/ஊடகவியலாளார்கள் மீது அரசாங்கமே தாக்குதல் - ஜே.வி.பி.
ஊடகங்கள் மீதும் ஊடகவியலாளார்கள் மீதும் அரசாங்கமே தாக்குதல் நடத்தியதாக ஜே.வி.பி கட்சியின் உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமை, படுகொலை செய்யப்பட்டமை, ஊடக நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை ஆகிய சம்பவங்களுடன் அரசாங்கத்திற்கு தொடர்பு இருப்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
தாக்குதல் சம்பவங்களை மேற்கொண்ட எவரையும் காவல்துறையினர் இதுவரையில் கைது செய்யவில்லை என அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், அரசியல் அழுத்தம் காரணமாக ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல் குறித்த விசாரணைகளை காவல்துறையினர் உரிய முறையில் மேற்கொள்வதில்லை என குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தாக்குதல்களின் பின்னணியில் அரசாங்கம் செயற்படுவதனால் எவரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். அரசாங்கம் இந்தத் தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புபடாவிட்டால் துரித கதியில் செயற்பட்டு குற்றவாளிகளை கண்டு பிடிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். தமக்கு ஏற்பட்ட அவப்பெயரை அரசாங்கத்தினால் களைந்து கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்
Post a Comment