Header Ads



அரிசிக்கு பாரிய தட்டுப்பாடு வரும்

இலங்கையில் பாரிய அரிசித் தட்டுப்பாடு வரும் நாட்களில் ஏற்படக் கூடும் என்று எச்சரித்து உள்ளார் உள்நாட்டின் பிரபல பொருளாதார நிபுணர்களில் ஒருவரான களனிப் பல்கலைக்கழகப் பேராசிரியர் பிறேமா பொடி மெனிக்க.

இவர் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியிலேயே இவ்வாறு அச்சம் தெரிவித்து உள்ளார்.

'நீடித்து வருகின்ற அடை மழைஇ பெருக்கெடுத்து ஓடுகின்ற வெள்ளம் ஆகியவை காரணமாக பெரும்பாலான நெல் வயல்கள் நிர்மூலம் ஆகி விட்டன. பாரிய அளவில் நெல் வேளாண்மை பாதிக்கப்பட்டு இருக்கின்றது. உள்ளூரில் நெல் உற்பத்தி பெரும் பின்னடைவை சந்தித்து உள்ளது.

ஆனால் போதுமான அரிசி கையிருப்பில் உண்டு என்று தம்பட்டம் அடிக்கின்றது அரசு. எனினும் ஏற்பட்டு இருக்கின்ற இழப்பை குறுகிய காலத்துக்குள் ஈடு செய்ய முடியாது. இழப்பை சமாளிக்க குறைந்தது நான்கு மாதங்கள் என்றாலும் எடுக்கக் கூடும்.

No comments

Powered by Blogger.