இலங்கையில் மீண்டும் பறக்கும் தட்டுவாசிகள்..!
முல்லேரியா பிரதேசத்தில் நேற்றிரவு வேற்றுக்கிரக வாசிகளின் பறக்கும் தட்டொன்று தென்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் மொரட்டுவை வானியல் ஆராய்ச்சி மையத்திற்கு அறியப்படுத்தியுள்ளனர்.
முல்லேரியா பிரதேசத்தில் நேற்றிரவு பறக்கும் தட்டு தென்பட்டதை பிரதேச வாசிகள் பலரும் நன்றாக அவதானித்துள்ளனர். பிரகாசமான வெளிச்சத்துடன் அது நகர்ந்து சென்றுள்ளது.
சில நாட்களுக்கு முன்பும் அதனையண்டிய பிரதேசத்துக்கும் பியகமை பிரதேசத்துக்கும் இடையில் அதே போன்றதொரு மர்ம வெளிச்சம் தென்பட்டதை கட்டுநாயக்கவிலிருந்து புறப்பட்ட விமானமொன்றின் விமானியொருவரும் மற்றும் அப்பிரதேசவாசிகள் சிலரும் கண்டுள்ளனர்.
அது குறித்து பொலிசாரும் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர். அவ்வாறான நிலையிலேயே நேற்றிரவு மீண்டும் பறக்கும் தட்டொன்று தென்பட்டுள்ளது. முல்லேரியாவின் புதிய நகரப் பகுதிக்கு அப்பறக்கும் தட்டு வந்து போயுள்ளது.
பிரதேச வாசிகள் அது குறித்து மொரட்டுவை ஆதர் சீ. கிளார்க் வானியல் ஆராய்ச்சி மையத்துக்கும் அறிவித்துள்ளனர்.
Post a Comment