முதலாம் திகதி வாக்காளர் அட்டை விநியோகம்
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்களர் அட்டை விநியோகம் அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தபால் மா அதிபர் எம்.கே.பீ.திஸாநாயக்க தெரிவித்தார்.
முதலாம் திகதி முதல் 10ம் திகதிவரை விடுமுறை நாட்களிலும் வாக்காளர் அட்டை விநியோகிக்கப்படுமென அவர் குறிப்பிட்டார்.
எதிர்வரும் 28ம் திகதி தேர்தல்கள் செயலகத்தினால் வாக்காளர் அட்டை தபால் திணைக்களத்திற்கு விநியோகிக்கப்படவுள்ளது.
வாக்காளர் அட்டை விநியோகிக்கவென 8400 அலுவலர்களை பணியில் ஈடுபடுத்தவுள்ளதாக தபால் மா அதிபர் குறிப்பிட்டார். நாடு முழுவதும் அமைந்துள்ள 647 தபால் நிலையங்கள் மற்றும் 3500 உப தபால் நிலையங்கள் ஊடாகவும் வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படவுள்ளன
Post a Comment