Header Ads



பிரிட்டனில் செயற்கை பெட்ரோல் விரைவில் விற்பனைக்கும் வருகிறது

தற்போது இயற்கையாக கிடைக்கும் கச்சா எண்ணையில் இருந்து தயாரிக்கப்படும் பெட்ரோல் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த நிலையில் இங்கிலாந்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் செயற்கை பெட்ரோலை தயாரித்துள்ளனர்.

ஹைட்ரனை மையமாக வைத்து புதிய மூலக்கூறுகளுடன் அது தயாரிக்கப்படுகிறது. இந்த பெட்ரோல் மூலம் கார்கள் மற்றும் என்ஜின்களை இயக்க முடியும். இதில் இருந்து வெளியாகும் புகையால் காற்றில் மாசு ஏற்படாது.சுற்றுச்சூழல் பாதிக்கப்படாது. வெளியாகும் வாயு கார்பனை போன்று மக்களின் உடல் நலத்துக்கு தீங்கு இழைக்காது.

செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட இந்த பெட்ரோல் ஒரு லிட்டர் 14 ரூபாய்க்கு விற்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த பெட்ரோல் பங்க்குகள் மூலம் விற்பனையாக இன்னும் 3 ஆண்டுகளாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்டீபன் பென்னிங்டன் தலைமையிலான விஞ்ஞானிகள் இந்த செயற்கை பெட்ரோலை கண்டு பிடித்துள்ளனர்.

இது சாதாரண பெட்ரோலை விட 3 மடங்கு சக்தி வாய்ந்தது. வாகனங்களில் அடைக்கப்பட்டு அடுத்த ஆண்டு சோதனை நடத்தப்படும். பின்னர் அது பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வழங்கப்படும்

No comments

Powered by Blogger.