பக்கத்து வீட்டு நாய்க்குட்டி கடித்து, மாணவி குரைத்து குரைத்து மரணம்
பக்கத்து வீட்டு நாய்க் குட்டியுடன் விளையாடிய 18 வயது மாணவிக்கு அந்த நாய்க்குட்டி கடித்ததால் மாணவி மரணமான சம்பவம் அக்குரஸ்ஸவில் கடந்த இடம் பெற்றுள்ளது.
இம்மாணவிக்கு அந்த நாய் கடித்ததை பெற்றோர் அறிந்தும் சரியான சிகிச்சை அளிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
சில தினங்களுக்கு முன்னர் இம்மாணவிக்கு காய்ச்சல் ஏற்பட்டு அக்குரஸ்ஸ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையும் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் அந்த மாணவி திடீரென நாய்போல குரைத்துக்
குரைத்து மரணமானார்.
மாணவிக்கு கடித்த நாய் பின்னர் அடித்துக் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மாத்தறை மரண விசாரணை அதிகாரி லலித் டீ சில்வா விசாரணை நடத்தி விசர் நாய் கடித்ததால் மரணம் சம்பவித்தது என தீர்ப்பு வழங்கினார்.
நாய் கடித்தால் உடனடியாக மருத்துவரை நாடி சிகிச்சை பெற்று விசர்நாய்த்தடுப்பூசி ஏற்றவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
Post a Comment