அமெரிக்காவுக்கு யாழ்ப்பாணத்தில் என்ன வேலை..?
அமெரிக்காவின் தகவல் கூடம் ஒன்று யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டிருப்பது எதிர்காலத்துக்கு மிகவும் பேராபத்தான விடயம் என்று 'திவயின' சிங்கள பத்திரிகை செய்தி பிரசுரித்து உள்ளது.
அமெரிக்க வெளியுறவு அமைச்சின் ஒற்றுப் படை அலுவலகமாகவே மேற்படி தகவல் கூடம் உள்ளது என்று 'திவயின' சிங்களப் பத்திரிகை குற்றம் சாட்டி உள்ளது.
துனிஷியா நாட்டில் அமெரிக்கா தகவல் கூடம் ஒன்றை திறந்து வைத்த பின்னர் என்ன நடந்தது? இப்பத்திரிகை கேள்வி எழுப்பி உள்ளது. அந்த தகவல் கூடத்தின் துணையுடன் அரசியல் கட்சிகளை உருவாக்கிய அமெரிக்கா அக்கட்சிகள் மூலமாக துனிஷியாவின் உள்நாட்டு அரசியலில் தலையிட்டது என்று இப்பத்திரிகை விளக்கம் தந்து உள்ளது.
அரசுக்கு எதிரான கொள்கைகளை உடைய இளைஞர்களை வடி கட்டி எடுத்து நாட்டில் பிரச்சினைகளை புதிதாக உருவாக்குவதும், ஏற்கனவே இருந்து வரும் பிரச்சினைகளை பெரிதுபடுத்துவதும் யாழ்ப்பாணத்தில் உள்ள தகவல் கூடம் அமைக்கப்பட்டிருப்பதன் உள்நோக்கம் என்று இப்பத்திரிகை கூறுகின்றது.
எனவே அரச உயர் மட்டத்தினர், யாழ்.மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி ஜெனரல் ஹத்துருசிங்க ஆகியோர் இது குறித்து உடன் நடவடிக்கை எடுக்கின்றமையுடன் இது சம்பந்தமாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மௌனத்தை கலைக்க வேண்டும் என்று இப்பத்திரிகை கோரி உள்ளது
Post a Comment