Header Ads



வியக்கவைக்கும் முபாரக்கின் சொத்து விபரம்

எகிப்தின் ஜனாதிபதி கொஸ்னி முபாரக்கிற்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் 40007000 கோடி டொலர் பெறுமதியான சொத்துகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

 முபாரக் விமானப்படை அதிகாரியாக இருந்த நாட்களில் இராணுவ ஒப்பந்தங்களின் மூலம் பெருந்தொகை செல்வத்தை எகிப்தின் முதற்குடும்பம் ஏற்படுத்திக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 1981 இல் அவர் ஜனாதிபதியாக வந்தபோது சொத்துகளை தமது குடும்பத்தினர்களின் பெயரில் பல்வேறு துறைகளில் முதலீடு செய்துள்ளதாக ஏ.பி.சி. செய்திச்சேவை தெரிவித்திருக்கிறது.

ஏனைய வளைகுடா நாடுகளிலுள்ள தலைவர்களின் பெருந்தொகை சொத்துகளுக்குச் சமனான விதத்தில் முபாரக்கும் சொத்துகளைக் கொண்டிருப்பதாக குயின்ஸீற்றனிலுள்ள அரசியல் விஞ்ஞானப் பேராசிரியர் அமானே ஜமால் கூறியுள்ளார்.

 அவரின் இராணுவ அரச சேவைத்துறைகளிலிருந்து திரட்டப்பட்ட அவருடைய தனிப்பட்ட சொத்து வர்த்தகத்துறைகளில் முதலீடு செய்யப்பட்டிருப்பதாக அமானே மேலும் கூறியுள்ளார்.

 இந்த ஆட்சியில் அதிகளவு மோசடி நிலவியது. பொதுமக்களின் வளங்கள் தனிப்பட்டவையாக மாற்றப்பட்டன என்று ஜமால் கூறுவதாக மேற்கோள்காட்டப்பட்டுள்ளது. முபாரக்கின் பணத்தில் பெருந்தொகை பங்கு எகிப்துக்கு வெளியே இருப்பதாக ஜமால் கூறியுள்ளார். பிரிட்டன், சுவிற்ஸர்லாந்தில் அந்தச் சொத்துகள் இருக்கலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

 இது மத்திய கிழக்கிலுள்ள ஏனைய சர்வாதிகாரிகளின் பாணியில் அமைந்ததாகும். அவர்களுடைய சொத்துகள் மாற்றத்துக்குட்படுவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

 முபாரக், அவரின் மனைவி, இரு புதல்வர்கள் பெருந்தொகை சொத்துகளைத் திரட்டியுள்ளனர். வெளிநாட்டுக்காரர்களுடனான பங்குடைமை வர்த்தகத்தின் மூலம் பெருந்தொகை நிதி திரட்டப்பட்டிருப்பதாக பிரிட்டனிலுள்ள டர்காம் பல்கலைக்கழகத்தின் மத்திய கிழக்கு அரசியல் விவகாரங்களுக்கான பேராசிரியர் கிறிஸ்தோபர் டேவிற்சன் கூறியுள்ளார்.

 லண்டன்,பாரிஸ்,மட்ரிட்,டுபாய்,வாஷிங்டன்,நியூயோர்க்,பிராங்பேர்ட் ஆகிய இடங்களில் முபாரக்கின் குடும்பத்துக்கு சொத்துகள் இருப்பதாக ஐ.எச்.எஸ். குளோபல் இன்சைட் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

 முபாரக்கிற்கு எகிப்திலும் பல வாசஸ்தலங்கள் இருப்பதாகவும் சில முன்னாள் ஜனாதிபதிகள்,மன்னர் ஆகியோரிடமிருந்து கிடைத்ததாகவும் ஏனையவை அவர் நிர்மாணித்ததாகவும் அலாடின் எலாசர் என்பவர் கூறியுள்ளார்.அவர் மிகவும் ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்தார். நாடளாவிய ரீதியில் பல வீடுகள் அவருக்குள்ளன. முபாரக்கின் குடும்ப சொத்து 5070 பில்லியன் டொலராக இருக்கும் என்று எலாசர் மதிப்பிட்டுள்ளார்

No comments

Powered by Blogger.