Header Ads



அறுக்குளா மீனின் அன்றைய விலையில் இன்று நெத்தலி - ஐ.தே.க.

மக்களை ஏமாற்றும் இந்த அரசாங்கம் பல தடவைகள் கடினமானம் தீர்மானங்களை எடுத்துள்ளதென ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக தெரிவிக்கின்றார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்
யுத்தத்தின் பின் வடக்கில் மூன்றில் இரு பகுதி கடற்பரப்பு விடுவிக்கப்பட்டதன் பின்னர் குறைந்த விலையில் மீன் சாப்பிட முடியுமென அரசாங்கம் கூறியது. அன்று சாலையோ மற்றும் நெத்தலி மீன் சாப்பிட்ட விலைக்கு யுத்தத்தின் பின்னர் அறுக்குளா மீன் சாப்பிட முடியுமெனக் குறிப்பிட்டனர்.

எனினும் யுத்தம் நிறைவடைந்து இரண்டு வருடங்கள் பூர்த்தியாகவுள்ள நிலையில் அன்று அறுக்குளா மீன் சாப்பிட்ட விலைக்கு இன்று மக்கள் சாலையோ மற்றும் நெத்தலி மீன் சாப்பிடுகின்றனர்.

யுத்தத்தின் பின்னர் அரசாங்கத்திடம் இருந்து மக்கள் எதிர்பார்த்த பிரபல்யமான தீர்மானம்தான் அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பாகும். அரசாங்கத்திற்கு பிரபல்யமான தீர்மானம் எடுக்க முடியாமல் போனமை, எதிர்கால சந்ததியினருக்காக கடினமான தீர்மானம் எடுக்க நேரிட்டமைக்கு அரசாங்கத்தின் செயற்பாடுகளே காரணம். என்றார் கயந்த.


No comments

Powered by Blogger.