இலங்கையில் வெள்ள பாதிப்பு, சர்வதேச உதவிகள் தாமதம்
இலங்கையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறு ஐ.நா வேண்டுகோள் விடுத்த போதும் அதற்கு குறைந்தளவினாலான நிதியுதவிகளே கிடைத்துள்து.
கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ளத்தை அடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்குவதற்காக 51 மில்லியன் டொலர் நிதி உதவி கோரி ஐ.நா வேண்டுகோள் விடுத்திருந்தது.
ஆனால் இந்த உதவிக் கோரிக்கைக்கு அனைத்துலக நாடுகள் மற்றும் நிறுவனங்களிடம் வரவேற்புக் கிடைக்கவில்லை.
நேற்று வரை 7.7 மில்லியன் டொலர் நிதியுதவியே கிடைத்துள்ளதாக மனிதாபிமானப் பணிகளுக்கான ஐ.நாவின் செயலகம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக இந்த மாத இறுதியில் மீளவும் ஒருமுறை இந்த வேண்டுகோளை விடுக்கவுள்ளதாகவும் ஐ.நா அறிவித்துள்ளது.
முதற்கட்ட வெள்ளப் பாதிப்பை ஈடு செய்வதற்கே ஐ.நா இந்த நிதியுதவியைக் கோரியிருந்தது.
ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள இரண்டாவது கட்ட வெள்ளத்தினால் முன்னையதை விடவும் அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. னினும் இரண்டாவது கட்ட வெள்ளப் பாதிப்புக்காக அனைத்துலக உதவிகள் ஏதும் கிடைக்கவில்லை.
நட்பு நாடுகள் கூட இந்த வெள்ளப் பாதிப்பை கண்டும் காணாமல் விட்டு விட்டதாகவும் தெரியவந்துள்ளது. கடந்தமாதம் கிழக்கில் வெள்ளம் ஏற்பட்ட போது இந்தியா, சீனா, பாகிஸ்தான் என்று பல்வேறு நாடுகளும் உதவிப்பொருட்களையும் நிதியுதவிகளையும் அனுப்பியிருந்தன
Post a Comment