உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியும், உலமா சபையின் அறிவிப்பும்
எதிர்ரும் உலகக்கிண்ண கிரிக்கெட் போட்கனையிட்டு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை அவசர அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பல்லின சமூகங்கள் வாழும் இலங்கையில் முஸ்லிம்களும் ஏனைய சமூகத்தவர்கள் போன்று நாட்டுப்பற்றுடையவர்கள் என்பதை அறிந்திருக்க வேண்டும்.
கடந்த காலங்களில் இலங்கையில் இடம்பெற்ற சில கிரிக்கெட் போட்டிகளில் கசப்பான சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த கிரிக்கெட் போட்டிகளில் கிடைக்கும் எந்த முடிவையும் நாம் இலங்கையர் என்ற உணர்வோடு நோக்குதல் வேண்டும்.
இப்போட்டித் தொடரில் பல முஸ்லிம் மற்றும் முஸ்லிமல்லாத நாடுகள் களமிறங்குகின்றன. அதில் நம் நாட்டுக்குகிடைக்கும் எந்த முடிவையும் மற்றைய சமூகங்களோடு சேர்ந்து நாமும் ஏற்க வேண்டுமேயன்றி பிற முஸ்லிம் நாடொன்று வெற்றி கொள்வதனை பெருமையாக எடுத்து நம் நாட்டை கீழிறக்கிப் பார்க்கலாகாது.
கடந்த காலங்களில் நடைபெற்ற சில போட்டிகளில் பாகிஸ்தான் போன்ற நாடுகள் வெற்றி கண்ட சில நிகழ்வுகளை எமது சகோதர சகோதரிகள் அபரிமிதமாக கொண்டாடி, நம் நாட்டிலுள்ள பிற சமூகத்தவர்கள் உள்ளங்கள் புண்பட்டதை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். ஆகையால் மேற்படி போட்டி சம்பந்தமாக நிதானமாக நடந்து பற்றை வெளிப்படுத்துமாறு இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு உலமாசபை வேண்டுகோள் விடுக்கிறது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Post a Comment