இலங்கையில் முதல் முறையாக கடல் விமான சேவை ஆரம்பம்
இலங்கையில் முதன் முதலாக கடல் விமான போக்குவரத்து சேவை (சீ பிளேன்) செவ்வாய்கிழமை அம்பாறை மாவட்டத்திலுள்ள கொண்டுவட்டுவான் குளத்தி லிருந்து வைபவ ரீதியாக ஆரம்பிக்கப்பட்டது.
கொண்டுவட்டுவான் குளத்திலிருந்து புறப்பட்ட சீ பிளேன் களனி கங்கையில் இறக்கப்பட்டதாக ஸ்ரீலங்கன் ஏயார்லைன் நிறுவனத்தின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் தினேஷ் சத்துரங்க கூறினார்.
ஸ்ரீலங்கன் எயார்லைன் நிறுவனத்தினால் இலங்கைக்கு அறிமுகப் படுத்தப்பட்டிருக்கும் இந்த சீ பிளேன் சேவை உல்லாச பயணிகளை கவரும் வகையிலேயே நடத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். இவ்விமான சேவை கொண்டுவட்டுவான் குளத்திலிருந்து வைபவ ரீதியாக ஆரம்பிக்கப்பட்ட போதிலும் திக்குவெல்ல, உணவட்டுன, ஹிக்கடுவ போன்ற பிரதேசங்களுக்கிடையிலும் நடத்தப்படும் எனவும் அவர் கூறினார்.
கொண்டுவட்டுவான் குளத்திலிருந்து புறப்பட்ட இவ்விமானத்தில் ஒன்பது பேர் பயணித்தனர். அவர்களில் ஆறு பேர் வெளிநாட்டுப் பிரஜைகள் என்றும் அவர் கூறினார்.
Post a Comment