Header Ads



தொழுகைக்கான பாங்கு கேட்டவுடன் காத்தான்குடியில் கடைகள் மூடப்படும்


காத்தான்குடியில் எதிர்வரும் மே மாதம் 7 ஆம் திகதி தொடக்கம் தொழுகைக்காக பாங்கு சொன்னவுடன் நகர வியாபர நிலையங்கள் மூடப்படவேண்டும் என்ற சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
இலங்கை வந்துள்ள இஸ்லாமிய அறிஞரான டாக்டர் சாகிர் நாயிக் நேற்று காத்தான்குடிக்கு சென்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து காத்தான்குடி முகைதீன் மெத்தை பெரிய பள்ளிவாசலில் ஏற்பாடு செய்யபடிருந்த நிகழ்வில் கலந்துகொண்டள்ளார் இதன் போது அந்த நிகழ்வில் உரையாற்றியுள்ள பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா   தெரிவித்துள்ளார் .

காத்தான்குடியை ஒரு புனிதமான நகராக கட்டியெழுப்ப வேண்டும் ஏனைய முஸ்லிம்களுக்கு இந்த நாட்டின் முஸ்லிம்களுக்கு ஒரு முன்மாதிரியாக திகழவேண்டும் நமது மண்ணில் நாம் நடைமுறைப்படுத்தும் இஸ்லாமிய சட்டங்கள் ஏனைய பிரதேசங்களுக்கும் நடைமுறைப்படுத்த முன்மாதிரியாக இருக்கவேண்டும் என்பதற்காக  இத்தீர்மானத்தை மேற்கொண்டுள்ளோம் என பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.

அந்த அடிப்படையில் மே மாதம் தொடக்கம் காத்தான்குடியில் பாங்கு சொன்னவுடன் கடைகள் மூடப்பட்டு தொழுகைக்காக பள்ளிக்கு செல்லவேண்டும் என்ற ஒரு சட்டம் அமுலுக்கு வரவிருக்கின்றது.

No comments

Powered by Blogger.