Header Ads



க.பொ.த. உ/த மாணவர்கள் ஆங்கிலபாட பரீட்சைக்கு தோற்றுவது அவசியம்

க.பொ.த.உயர்தரப் பரீட்சையின் போது மாணவர்கள் ஆங்கிலபாட பரீட்சைக்கு தோற்றுவது இவ்வருடத்தில் இருந்து கட்டாயமெனஉயர்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. ஆங்கில பரீட்சைக்கு தோற்றாத மாணவர்களுக்கு பல்கலைக்கழக அனுமதி வழங்குவதை நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக உயர்கல்வி அமைச்சின் செயலாளர் கலாநிதி சுனில் ஜயந்த நவரத்ன தெரிவித்துள்ளார்.

ஆங்கில ஆசிரியர்கள் இல்லாத பாடசாலை மாணவர்கள் இந்த பரீட்சையில் தோற்றும் போது அவர்களின் விடைத்தாளில் பாடசாலையில் ஆங்கில ஆசிரியர் இல்லாததை குறிப்பிட வேண்டும்.

 உயர்தரப் பெறுபேற்றுக்கமைய பல்கலைக்கழகத்திற்கு அனுமதிக்கப்படும் மாணவர்கள் உயர்தரப் பரீட்சையில் பொது ஆங்கில பரீட்சையில் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டு பல்கலைக்கழகத்தில் ஆங்கில கற்கை நெறிகளுக்கு அனுப்பப்படுவதாக உயர்கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

 இதேவேளை இந்த வருடம் பல்கலைக்கழகத்திற்காக தெரிவு செய்யப்பட்டுள்ள சகல மாணவர்களும் உயர்கல்வி அமைச்சு நடத்தும் ஆங்கில அறிவு பரீட்சைக்கு கட்டாயமாக தோற்ற வேண்டும் எனவும் உயர்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

 பல்கலைக்கழக அனுமதி கிடைத்துள்ள மாணவர்களின் ஆங்கில அறிவை அறியும் வகையில் நடத்தப்படும் இந்த பரீட்சையின் மூலம் அந்த மாணவர்களுக்கு மூன்று மாதகால ஆங்கில கற்கை நெறி நடத்தப்படுவதாக உயர்கல்வி அமைச்சு செயலாளர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.