Header Ads



பேன் தொல்லை - பிரிட்டன் பிரதமரின் கவலை


பெண் பிள்ளைகள் இருக்கும் வீட்டில் எல்லாருடைய கைகளும் பெரும்பாலும் தலையிலேயே இருக்கும். அரிப்பதும் சொரிவதும் மாறிமாறி நடக்கும். ஷாம்பு, ரசாயன பூச்சி மருந்துகள் அடித்தாலும் பள்ளி விட்டு வரும்போதே பேன் படையையும் அள்ளிக்கொண்டு வந்துவிடுவார்கள்.

இதில் சமீபத்தில் பாதிக்கப்பட்டிருப்பது இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன்.

சமீபத்தில் தன் வீட்டுக்கு வந்திருந்த செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,

உங்களுக்கு தலை அரிக்கிறதா? சாரி. என் மகள் நான்சியும் மகன் ஆர்தரும்தான் காரணம். எவ்வளவுதான் தலையை சுத்தம் செய்து அனுப்பினாலும் பள்ளிக்கு போனதும் சக மாணவ, மாணவிகளிடம் இருந்து இவர்களது தலைக்கு பேன் வந்துவிடுகிறது. இப்போது படுக்கை, தலையணை என வீடு முழுவதும் பேன் சுற்றுகிறது. இதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு கூறிய கேமரூன், ‘‘வீட்டுக்கு போனதும் அரித்தால் சொல்லி அனுப்புங்கள். சீப்பும் ஹேர்ஆயிலும் அனுப்பி வைக்கிறேன்’’ என்றும் சொல்லி சிரித்தார்.

No comments

Powered by Blogger.