யாழ்ப்பாணத்தில் மீளக்குடியேறும் முஸ்லிம்களுக்கு உதவ தயார்
யாழ்ப்பாணம்கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனப் பிரதிநிதிகள் வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி,யாழ்.அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார்,யாழ்.மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா ஆகியோர்களை தனித்தனியாக சந்தித்து யாழ் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியுள்னர்.
முஸ்லிம் சம்மேளனத்தில் கோரிக்கைகளை செவிமடுத்த ஆளுநர் அவற்றை உரிய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளினூடாக நிறைவேற்றித்தருவதாக உறுதியளித்ததாக சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய் அய்யூப் அஸ்மின் தெரிவித்தார்.
ஆளுநரிடம் சம்மேளனப் பிரதிநிதிகள்,காணி மற்றும் வீடில்லாப் பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுத் தரும்படியும் யாழ்.மாவட்ட முஸ்லிம் பிரதேசங்கள் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக எந்தவொரு அபிவிருத்தியும் இடம்பெறாததினால் வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் முஸ்லிம் பிரதேச அபிவிருத்தியும் உள்ளடக்கப்பட வேண்டும் என்றும் சுய தொழில் முயற்சிகளை ஊக்குவிப்பதற்காக துவிச்சக்கரவண்டிகள் ,கைத்தொழில் உபகரணங்கள்,சிறு உற்பத்திகளுக்கான உபகரணங்கள் போன்றவற்றை பெற்றுக்கொடுக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
யாழ்.முஸ்லிம் சமூகத்தின் மீள்குடியேற்ற செயற்பாடுகள் அனைத்திலும் யாழ்,கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனத்தினரையும் முழுமையாக இணைத்துக்கொள்ள வேண்மெனவும் சம்மேளனம் கேட்டுள்ளதாக அஸ்மின் மேலும் தெரிவித்தார்.
இவர்களின் மீள்குடியேற்றம் படிப்படியாக மேற்கொள்ளப்படவேண்டும் என்பதனால் யாழ்.மாவட்டங்களிலும்,வெளிமாவட்டங்களிலும் சிவில் சேவைகளை பெற்றுக்கொள்வதிலுள்ள சிக்கல்கள் தவிர்க்கப்பட வேண்டுமெனவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
யாழ்.அரச அதிபர் இமெல்டா சுகுமாரை சந்தித்த போது யாழ்ப்பாண முஸ்லிம் அனைத்து உடைமைகளையும் இழந்த நிலையில் வெளியேற்றப்பட்வர்கள். அவர்களின் பெரும் பகுதியினர் புத்தளம்,நீர்கொழும்பு,அநுராதபுரம், கொழும்பு, பாணந்துறை ஆகிய பகுதிகளில் அகதி முகாம்களிலும் தனியாகவும் வசித்து வந்தார்கள்.
20 வருட அகதி வாழ்க்கையில் தமது தற்காலிக இருப்பிடங்களில் தொழில் வாய்ப்புகள், பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகள் போன்றவற்றை ஒழுங்குபடுத்திக்கொண்டிருப்பதனால் அவர்களின் மீள்குடியேற்றம் படிப்படியாக இடம் பெறவேண்டும் என சுட்டிக் காட்டப்பட்டுள்ளதுடன் மீளகுடியேறியோர்,மீள்குடியேற்றத்திற்கு தயாராகுவோர் என இரு பிரிவுகளாக அடையாளப்படுத்துவதாகவும் சம்மேளனம் விளக்கமாக தெளிவு படுத்தியுள்ளது
Post a Comment