சீர்திருத்தத்திற்கு முன் தாம் சீர்திருந்தியிருக்க வேண்டும்
நபி (ஸல்) அவர்களது ஸீறாவை அவதானிக்கின்ற ஒருவர் நண்பகல் சூரிய னைப் போன்று அவர் மக்களிடையே அறியப்பட்டிருந்தார் என்பதை விளங்கிக் கொள்வார். அவர் சிறந்த பண்புகளூடாக, ஒழுக்கங்கள் ஊடாக, உண்மை, நம்பிக்கையினூடாக நபித்துவத்திற்கு முன்னைய 40 வருடங்களிலும் நபித்து வம் கிடைத்ததன் பின்னர் மரணிக்கும் வரையிலும் வாழ்ந்திருக்கின்றார்.
இந்த சிறந்த பண்புகளின் காரணமாக நபி (ஸல்) அவர்கள் கூறுகின்ற அனைத்து விடயங்களையும் அவரது சமூகம் ஏற்றுக் கொள்வதாக காணப்பட் டது. ஸபா மலையின் மீதேறி ‘நான் இந்த மலைக்குப் பின்னால் உங்களைத் தாக்குவதற்காக ஒரு படை இருக்கின்றது என்று கூறினால் நீங்கள் என்னை நம்புவீர்களா’ எனக் கேட்டபோது அவர்கள் ‘நாங்கள் உங்களை பொய் சொல் பவராகக் கண்டதில்லை’ என பதிலளித்தார்கள்.
இந்தப் பண்பைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் ‘அல்லாஹ் என்னை மிகச் சிறந்த ஒழுக்கங்களையுடை யவனாக பயிற்றுவித்தான்’ எனக் கூறுகின்றார்கள். அவரிடம் மிகச் சிறந்த பண்புகள் இருந்ததை அல்குர்ஆன் இவ்வாறு கூறுகின்றது. உங்களுடைய தூதரிடத்திலே உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கின்றது. யார் அல்லாஹ்வையும் மறுமைநாளையும் எதிர்பார்த்திருக் கின்றாரோ அவர் அதிகமாக அல்லாஹ்வை நினைவு கூறட்டும். (அஹ்ஸாப்: 21
நபி (ஸல்) அவர்களைத்தவிர வேறு எவரையும் அவர்கள் தமது பொருட்களை நம்பி ஒப்படைக்கக் கூடியவர்களாக காணவில்லை. எனவேதான் ஹிஜ்ரத்தின்போதும் நபி (ஸல்) அவர்கள் தன்மீது அந்த மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையை உறுதிப்படுத்துவதற்காக தன்னிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த அமானிதப் பொருட்களை அலி (றழி) அவர்கள் மூலம் ஒப்படைக்கச் செய்தார். நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார்: நான் சிறந்த ஒழுக்கங் களை பூரணப்படுத்துவதற்காகவே அனுப்பப்பட்டுள்ளேன்.
இந்தப் பண்புகளைப் பற்றி ஸூறதுல் கலமில் அல்லாஹுத ஆலா இவ்வாறு கூறுகின்றான்: நிச்சயமாக நீங்கள் மகத்தான ஒழுக்கங்களைக் கொண்டவராக இருக்கின்றீர்கள்.
நபி (ஸல்) அவர்கள் இந்தப் பண்புகளைக் கொண்டே ஸஹா பாக்களைப் பயிற்றுவித்தார்கள். இதனை அல்குர்ஆன் இவ்வாறு கூறுகின்றது:
‘முஹம்மத் அல்லாஹ்வின் தூதராவார். அவரோடு இருப்பவர்கள் தங்களுக்கிடையே மிகவும் இரக்கம் கொண்டவர்களாகவும் காபிர்களுடன் மிகவும் கடுமையாக நடந்துகொள்பவர்களாகவும் காணப்பட்டார்கள். ருகூஃ செய்பவர்களாகவும் சுஜூது செய்பவர்களாகவும் அவர்களை நீங்கள் காண்பீர்கள். அல்லாஹ்விடமிருந்து பேரருளையும் அவனது பொருத்தத்தையும் அவர்கள் தேடுவார் கள். அவர்களுடைய அடையாளம் ஸுஜூத் செய்த காரணத்தினால் அவர்களு டைய முகங்களில் காணப்படும். இதுவே தௌராத்திலுள்ள அவர்களுக்கான உதாரணமாகும்.
‘இன்ஜீலிலுள்ள அவர்களுக்கான உதாரணமாவது ஒரு பயிரைப் போன்றதாகும். அது தன் முளையை வெளிப்படுத்தி பின்னர் அதைப் பலப்படுத்துகின்றது. பின்னர் அது கனமாகின்றது. பின்னர் அது தன் தண்டின்மீது நிமிர்ந்து நிற்கின்றது. விவசாயிகளை ஆச்சரியமடையச் செய்கின்றது. இவர்களைக் கொண்டு நிராகரிப்போருக்கு அவன் கோபமூட்டுவதற்காக (இவ்வாறு உதாரணங்கள் கூறுகின்றான்) அவர்களில் விசுவாசம் கொண்டு நற்கருமம் செய்பவர்களுக்கு அல்லாஹுதஆலா மகத்தான கூலி யையும் பாவமன்னிப் பையும் வழங்குவான். (பத்ஹ்: 29)
இவர்கள்தான் தமது தோழரின் பண்புகளை அவ்வாறே தமது பண்புகளாக மாற்றிக் கொண்டோருக்கான உதாரணப் புருஷர்கள்.அவர்கள் அபூபக்ர் (றழி) யின் உண்மைத் தன்மையையும் உமர் (றழி) யின் நீதத்தையும் உஸ்மான் (றழி) யின் வெட்கத்தையும் அலி (றழி) யின் வீரத்தையும் எடுத்துக் கொண்டனர். ஸஹாபாக்களிடையே பல்வேறு துறைசார்ந் தோர் காணப்பட்டனர். சிலர் அல்குர்ஆனை மொழி பெயர்த்தனர். இன்னும் சிலர் ஹதீஸ்களை அறிவித்தனர். மற்றும் சிலர் ஏனைய கலைகளில் பிரபல மானார்கள். என்றாலும், நல்லொழுக்கங்களில் அவர்கள் அனைவரும் ஒரே தரத்தைக் கொண்டவர்களாகக் காணப்பட்டார்கள்.
இந்தப் பண்புகள் முஸ்லிம்களுடைய வாழ்க்கையாக இருந்தது. போராட்டத்திலும் சமாதானத்திலும் கொடுக்கல் வாங்கல்களிலும் திருமணத்திலும் விவாகரத்திலும் சொல்லிலும் செயலிலும் இருந்தன.
இஸ்லாத்தில் மேற்கொள்ளப்பட்ட முதலாவது உடன்படிக்கையில் இந்த விடயங்கள் தெளிவாக காணப்படுகின்றன. முதலாவதாக அகீதா இடம்பெறுகின் றது. பின்னர் ஒழுக்கம், நற்பண்புகள் இடம் பெறுகின்றன. அதனை அடுத்து வணக்க வழிபாடுகள் காணப்படுகின்றன.
ஒரு முஸ்லிம் தொழுகையை நிறைவேற்றும் போது அது அவனை பாவங்களை விட்டும் தடுக்கின்றது. அவன் ஸகாத்தை வழங்கும்போது அது அவனது உள்ளத்தைத் தூய்மைப்படுத்து கின்றது. அவன் நோன்பு நோற்கின்றபோதும் அது அவனில் தக்வாவை ஏற்படுத்துகின்றது. அவன் ஹஜ்ஜை நிறைவேற்றும் போது அது அவனில் தூய்மையை ஏற்படுத்துகின்றது. ஏனைய சுன்னத்தான வணக்க வழிபாடுகள் அவனை அல்லாஹ்வின்பால் நெருங்கச் செய்கின்றன.
இந்தப் பண்புகளை அணிகலனாகக் கொண்ட ஒருமுஸ்லிம் தனது பெற்றோ ருக்கு மத்தியிலும் தனது குடும்பத்தினர் அயலவர்கள், உறவினர்கள் மத்தியி லும், தான் வேலை செய்யும் இடத்திலும் தனது கொடுக்கல் வாங்கல்களிலும் இந்தப் பண்புகளோடே அறியப்படுவான். அவனுக்கு ஜிஹாதை நோக்கி அழைப்பு விடுக்கப்பட்டால் ஆயுதத்திற்கு முன்னால் அவனிடம் நற்பண்புகள்தான் வெளிப்படும்.
இமாம் ஹஸனுல் பன்னா கூறினார்கள்; நீங்கள் படைத்தள பதிகளாக இருப்பதற்கு முன்னர் அல்லாஹ்வின் அடியார்களாக இருங்கள். நீங்கள் இபாதத்துக்களோடு இணைந்திருங்கள். அது சிறந்த தலைமைத்துவத்திற்கு இட்டுச் செல்லும்.
இஸ்லாத்தின் முதலாவது உடன்படிக்கையை அவதானித்துப் பாருங்கள். நபியே! உங்களிடம் முஃமினான பெண்கள் வந்தால் அவர்களுடன் நீர் வாக்குறுதி செய்துகொள்வீராக அல்லாஹ்விற்கு எப்பொருளையும் இணைவைப்பதில்லை என்றும் விபச்சாரம் செய்வதில்லை என்றும் தங்கள் பெண் பிள்ளைகளை கொலை செய்வதில்லை என்றும் தங்களுடைய கைகளுக்கும் கால்களுக்குமிடையில் எதனை அவர்கள் கற்பனை செய்கின்றார்களோ அவ்வா றான அவதூறை இட்டுக் கட்டுவதில் லையெனவும் நன்மையானவற்றில் உங்களுக்கு மாறு செய்வதில்லை என்றும் (அவர்களிடம் உடன்படிக்கை செய்துகொள்வீராக) நீங்கள் அவர்களுக்காக அல்லாஹ்விடத்தில் பாவமன்னிப் புத் தேடுவீராக. நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பாளன், மிகுந்த கிருபை யுடையவன். (மும்தஹினா: 12)
இந்த உடன்படிக்கை அடிப்படையான ஒழுக்கங்களையும் பெறுமானங்களையும் உறுதி செய்கின்றது. இரண்டாவது உடன்படிக்கை ஈமான் கொண்டவர் களிடம் வீரம், அர்ப்பணம், சகோ தரத்துவம், அல்லாஹ்வுக்காக செலவளித்தல் போன்ற பண்பு களை ஏற்படுத்தியது.
மேற்கூறிய நற்பண்புகள் ஒழுக்கங்கள் சீரான அகீதாவைக் கொண்டவர்களின் விளைவாகக் காணப்படும். இந்தப் பண்புகளைத்தான் ஒரு இஸ்லாமிய இயக்கமும் அதன் அங்கத்தவர்கள், தலைமை போன்றவர்களிடம் ஏற்படுத்த வேண்டும். ஏனெனில், ஓர் இஸ்லாமிய அமைப்பின் இலக்குகள் ஈமானோடு இணைந்த நல்ல பண்புகளைக் கொண்ட சகோதரர்களின்றி முழுமைபெற மாட்டாது.
இந்த அடிப்படையான பண்புகளை இஸ்லாமிய அமைப்புக்கள் தமது பயிற்றுவிப்பின்போது கவனத்திற் கொள்ள வேண்டும். சீர்திருத்தத்திற்கு முன்னால் தாம் சீர்திருந்தியிருக்க வேண்டும் என்பதை அங்கத்தவர்களிடையே ஆழமாக பதித்தல் வேண்டும். அல்லாஹ் எம் அனைவரையும் பொருந்திக்கொள்வானாக.
நன்றி மீள்பார்வை.
Post a Comment