ரஸ்யாவில் தாக்குதல் தொடரும் முஸ்லிம் போராளிகள் எச்சரிக்கை
செச்னியாவின் கிளர்ச்சி குழுவின் தலைவர் டோகு உமாரோவ் தமது கிளர்ச்சி படையினர் ரஷ்யா மீது மேலும் பல அதிரடித் தாக்குதலை இவ்வாண்டில் மேற்கொள்ள போவதாகவும் இதனால் ரஷ்யாவில் இரத்தமும் மக்களின் கண்ணீரும் பெருக்கெடுக்குமென்றும் எச்சரிக்கை செய்துள்ளது.
ரஷ்யப் படைகள் செச்னியாவில் வடபகுதியில் இருக்கும் கெளகாசுஸ் பிரதேசத்தில் இருந்து வெளியேறத் தவறினால் ரஷ்யாவில் இந்தப் பேராபத்து மேற்கொள்ளப்படுவதை எந்த சக்தியாலும் தடுத்துவிட முடியாது என்று கூறினார்.
இஸ்லாமிய இணையத்தளம் ஒன்றிற்கு செச்னிய கிளர்ச்சித் தலைவர் அனுப்பி வைத்திருக்கும் செய்தியில், தனது கிளர்ச்சி படையைச் சேர்ந்த ஒரு சகோதரர் ரஷ்யாவில் சதிவேலைகளைச் செய்வதற்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இறைவனின் ஆணையுடன் மாதம் ஒரு தடவை இத்தகைய பெரும் தாக்குதலை மேற்கொள்ளப்போவதாக அவர் மேலும் தெரிவித்தார். 2004ல் ரஷ்யாவில் பாடசாலையொன்றில் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 320 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது
Post a Comment