சவூதி அரேபியா மாற்றத்தை விரும்புகிறதா..?
சவூதி அரேபியாவில் முதன் முறையாக கல்விமான்கள் சிலர் இணைந்து புதிய கட்சி ஒன்றை உருவாக்கியுள்ளதாக அறிவித்துள்ளனர்.
உம்மா இஸ்லாமியக் கட்சி என அக்கட்சி பெயரிடப்பட்டுள்ளது.
இக்கட்சியில் மனித உரிமை ஆர்வலர்கள், வக்கீல்கள் மற்றும் வர்த்தகர் ஒருவரும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இதனை அங்கீகரிக்குமாறு அவர்கள் அந்நாட்டு மன்னரிடம் விண்ணப்பித்துள்ளனர்.
மன்னர் ஆட்சி நிலவி வரும் சவூதி அரேபியாவில் அரசியல் கட்சிகளுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
அங்கு ஒரே ஒரு தேர்தல் 2005 ஆம் ஆண்டு நகர சபை உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்றது. இந்நிலையில் அரசாங்கமொன்றினை தேர்ந்தெடுப்பதற்கான மக்களின் உரிமை, பெண்களின் உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் மறுசீரமைப்பு போன்றவற்றுக்கான சரியான தருணம் இதுவெனவும் புதிய கட்சி தெரிவித்துள்ளது.
எகிப்து மற்றும் டுனிசியா நாடுகளில் அந்நாட்டு அரசாங்கங்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றும் வரும் இச்சந்தர்ப்பத்தில் இவ்வறிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்
Post a Comment