"அப்பாவுக்கு புற்று நோய் இல்லை” - நாமல்
"அப்பாவுக்கு புற்று நோய் இல்லை” இப்படித் தெரிவித்து உள்ளார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வரும், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஸ.
நான் வீட்டில் அவருடன்தான் இருக்கின்றேன். அவருக்கு சுகவீனம் என்றால் எனக்கு நிச்சயம் தெரிந்து இருக்கும்.
ஜனாதிபதி கடும் சுகவீனம் அடைந்துள்ளார், புற்றுநோய்க்கு சிகிச்சை பெறத்தான் கடந்த மாதம் அமெரிக்கா சென்று இருந்தார் என்பன எல்லாம் கட்டுக் கதைகள். அப்பட்டமான பொய்கள். ஆளும் கட்சிக்குள் நெருக்கடி நிலையை ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் சதி செய்கின்றன. ஆனால் எதிர்க்கட்சியினரின் சதிகள் வெற்றி பெற மாட்டாது எனவும் அவர் மேலும் தெரிவித்து உள்ளார்
Post a Comment