Header Ads



விலைவாசியை கட்டுப்படுத்தாவிடின் இலங்கையும் துனீசியாவாக

விலைவாசிகளைக் கட்டுப்படுத்தி வாழ்க்கைச் செலவைக் குறைக்க அவசர நடவடிக்கை எடுக்கத் தவறினால் துனீசியாவில் ஏற்பட்டது போன்று அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடும் நிலை ஏற்படும் என்று ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்க எச்சரித்துள்ளார்.

கம்பகாவில்  நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்தார்.

“ உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. குறிப்பாக அரிசி விலை உச்சதைத் தொட்டுள்ளது.
ஏப்ரல் மாதம் வரப் போகின்ற சிங்கள-தமிழ் புத்தாண்டு காலத்தில் அரிசி விலை மேலும் அதிகரிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

மக்களின் பணத்தை அரசாங்கம் தவறாகக் கையாள்கிறது. துனீசியாவில் ஏற்பட்ட நிலை சிறிலங்கா அரசுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
பொருட்களின் விலையைக் குறைத்து விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தத் தவறினால் அங்கு ஏறபட்ட நிலைமை இங்கு ஏற்படுவதற்கு காலம் எடுக்காது“ என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

No comments

Powered by Blogger.